பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 திவ்விய தேசயாத்திரையின் சரித்திரம். (2-ம் அப்படித் துவஜஸ்தம்பம் ஸ்தாபித்தபிறகு கிருஷ்ண தவராயலு குடகு மலையாளம் கவுட முதலான நாடுகளின் மீது படையெடுத்துப்போய் ஜயித்து, அந்த அரசர்களுக் குக் கப்பங்களை நியமித்தும், பிறகு சேர,சோழ, பாண்டிய நாடுகளின் மீது படையெடுத்துப் போய் ஜயித்து துவஜஸ்தம் பங்களை நாட்டிவிட்டுத் தமது விஜயநகரத்துக்குத் திரும்பி வந்தும், வடதேசங்களின் மீது படை எடுக்கத்தக்க குண்டு துப்பாக்கி பீரங்கி மருந்து முதலானவைகளைச் சித்தப்படுத் திக்கொண்டும், களிங்கதேச சாஜனைத் தம் வசமாக்கிக் கொண்டும், தமது மஹாமதியூகியாகிய திம்மாசு அப்பாஜி யையும், சேதிைபதியாகிய சதாசிவராயலையும் கூட்டிக் கொண்டு மத்திய இந்தியா மார்க்கமாக கூர்ச்சரம் அல்லது குஜராத்து தேசத்தையும், பிறகு மகததேசத்தையும், இடைக்கிடை இருந்த மகமதியர்களையும் ஜயித்துக்கொண் கும், விஜயநகரத்துக்குத் திரும்பிவந்து தமது பிரபுத்து வத்தை ஹிமசேது பரியந்தம் பிரபலமாகப் புகழும்படி நடத்திவந்தார். கிருஷ்ணதேவராயலு 1515 கொண்ட வீட்டி சீனமயை ஜயித்த விநோத சரித்திரத்தைப் புருஷார்த்து பிரதானியில் வெளியான கொண்ட வீட்டி கண்டகவியில் விவரமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த நாட்டைச் சுற்றிலும் எழுபத்திரண்டு பாளையக்காரர்கள் சூழ்ந்திருந்த படியாலும், அது மகா அரணான மலைக்கோட்டையாக இருந்தபடியாலும், அப்படி அரணான கோட்டையைத் காக்கப் பிடிப்பது கஷ்டசாத்தியமென் றிருக்கையில், அதை அறிந்த ஒரு பிராமணர் தந்திர உபாயத்தால் அப் பாளையக்காரர்களாகிய செட்டிகளை வசப்படுத்தியும், அவர்க ளால் அங்கு ஒரு பெரிய கோயிலைக் கட்டிவைக்கச் செய் தும், அதில் கோபிநாதசுவாமி விக்கிரகத்தைப் பிரதிஷ்டிப் பிக்கச் செய்வித்தும், அந்தப் பிரதிஷ்டை உத்ஸவத்னதப் பார்ப்பதற்கு அந்தப் பாளையக்காரர்களைத் தருவித்தும், அவர்களைத் தந்திர மந்திர மருந்து விருந்து களால் சாகும் படி செய்ய, அச்சமயமறிந்து பிருஷ்ணதேவராயலு அக் கோட்டையின் மீது படை எடுத்துப்போய், மூன்றுமாத காலம் முற்றுகைப் போட்டுப் பிடித்து அங்குச் சாலுவ திம் மரசை அதிகாரியாக நியமித்து விட்டும், பிறகு பெல்லமு கொண்ட, நாகார்ஜுன் கொண்ட, வினு கொண்ட என்