பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகம்) தெலுங்குநாடு. - 219 பெயர்த்துத் தமது பர்காட்டன் எம்பயர் என்னும் விஜய நகரசரித்திரம் 236 முதல் 290-ம் பக்கங்களில் பதிப்பித் திருக்கிற சங்கதிகளின் சங்கிரகம் பின்வருமாறு:* ஸ்ரீநரசிம்மராயலுடைய ஸமஸ் தானம் வடக்கே பீஜப் பூர், கோலகுண்டாமுதல் தெற்கே கன்னியாகுமரிவரை பில் பரவி இருந்ததாகவும், அதற்கு மூன்று பக்கங்களிலும் அகண்ட சமுத்திரங்களும், அச்சமுத்திரக்கரை யோரங்க ளில் வர்த்தக வாணியஞ் செய்ய வசதியான கரை துறைப் பட்டணங்க ளிருந்ததாகவும், உள் நாடுகளில் பிரம்மாண்ட பருவத பிரதேசங்களும், மலைகளும், குன்றுகளும், காடுகள் ளும், நதிகளும், குளங்களும் வசதியாக அமைந்து இருந்த தனால், நஞ்சைப் புஞ்சை முதலான நாலாவகைத் தானியன் களும், தென்னை, கமுகு, மா, பலா முதலான் தோப்புகளும் பயிர் செய்யப்பட்டும், அவற்றின் பலனைப் பிரதி வெள்ளிக் கிழமைதோறும் கூடும் சந்தைகளுக்குக் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்துவிடுவதாகவும், அந்தச் சந்தைக் கருக லிருந்த ஒரு பெரிய ஆலமரத்தடியில் தான் விற்பனைக்குக் கொண்டுவந்த 320 குதிரைகளை நிறுத்தி இருந்ததாகவும், இந்த ஸமஸ்தானத்தில் வதிந்து வரும் ஆண், பெண் பிராம் மணர்கள் அதிக அழகுள்ளவர்களாகவும், படித்தவர்களாக வும், பக்திபூஜைகளில் அதிக சிரத்தை யுள்ளவர்களாகவும், பொதுவாகப் பிரஜைகள் பகை மன்னருடைய பயமற்று த தைரியமாயும் அந்தியோன்னியமாயும், சந்தோஷமாயும் இருந்ததாகவும், தாம் விஜயநகரத்துக்குப் போகும் போது இடையில் தார்வாரில் தங்கிப் போன தாகவும் அங்கு அழகான கோயில் களும், அவைகளுக்குள் அநேக விக்கிரகங்கள் வைத்துப் பிரதி தினமும் பிராம்மணர்கள் வந்து பூஜை செய்து கொண் 0ம், தாசிப்பெண்கள் அழகான ஆடையாபாணங்களை அணி ந்து வந்து ஆடிப்பாடியதாகவும், அந்த தார்வாருக்கு 18லீக் தூரத்திலுள்ள விஜயாகரத்துக்குப் போனதில், அது 24லீக் விஸ்தீரண முள்ள தாயும், நான்கு பக்கங்களிலும் மலைக னால் சூழப்பட்டதாயும், அப்படிச் சூழப்பட்டிருந்த விஜய நகாக்கோட்டை கருங்கற்களால் கட்டப்பட்ட உன்னதமான மதில் சுவர்களாலும், கோயில் கோபுரங்களாலும் கட்டப் பட்டும், வாசல் வழியன்றி வேறுவழிக ளற்றதாயும், நக ரைச்சுற்றி இருக்கும் மலைகளுக்கும் கோட்டையின் மதில்