பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 திவ்விய தேசயாத்திரையின் சரித்திரம். (2-ம் சுவர்களுக்கும் இடையில் அநேக குளங்களும் வாய்க்கால்க ளும் வெட்டப்பட் டிருப்பதாயும், அவற்றின் தண்ணீரால் தென்னை மா முதலான தோப்புகளையும், புஷ்பத் தோட்டங் களையும், சிங்கார உத்தியானவனங்களையு முடைய தாயு மிருப்பதாகவும், இந்த ஸமஸ்தானத்தில் பெரும்பான்மையோர் பிராம் மணர்களாயும், ஸமஸ்தானத்தின் பெரும்பான்மையான காரியங்களை அவர்கள் நடத்தி வருவதாகவும், இந்த விஜயநகர் இராஜன் மத்தியதா உயரமும், அழ கமைந்த உருவமும், சற்று ஸ்தூலித்த தேகமும், அம்மைத் தழும்புள்ள முகமும், தரும் சிந்தையு முடையவராய் இருந்ததாகவும், இவர் அதிகாரத்திற்குள் அநேக ராஜராஜர்கள் அட ங்கி ஆண்டுவந்த தாயும், 12 மனைவிகளை உடையவராயும் அவர்களில் 3 பெயர் பட்டமஹிஷிகளாயும், அவர்களிற் சிலர் ஒரிசா, ஸ்ரீரங்கப்பட்டணம் முதலான மன்னர்களுடைய குமாரத்திகளாயும், ஒருவர் தனது பாலிய சிநேகி தியாயும் இருந்ததாகவும், அந்த மனைவிகள் ஒவ்வொருவரும் தனித் தனியான வீடுவாசல்களையும், வேலைக்காரிகளையும் உடை யவர்களாயும்; பொன்மயமாயும் இரத்தின மயமாயும் ஜூவ விக்கும் ஆடையாபாணங்களை உடையவர்களாயும், அவர் களைப் பாதுகாக்க அநேக கோஷாப் பெண்டுகளும், கோஜாக் களும் உருவியகத்தி கட்டாரிகளோடு நின்று காவல் காத்து வந்ததாயும், இராஜஸ் திரீகள் வெளியில் போக்கு வாத்து செய்ய அநேக அழகான மூடுப்பல்லக்குகளும், அவைகளைத் தூக்கிக் கொண்டுபோக பெண் சிவிகைகளும், பெண் மெய் காப்பு கரும் நியமிக்கப்பட்டிருக்கிறதாகவும், இந்த அந்தப்புர ஸ் கிரீகளைப் பாதுகாக்க 12,000 பெண் வேலைக்காரிக ளிருந்ததாயும், அவர்களிற் சிலர் மல்யக் சம், வில்யுத்தம், சங்கீதம், சட்ட நியாயங்கள் தெரிந்த வர்களாயும் இருந்து பெண்டுகளுக்குள் நடக்கும் சண்டை சச்சரவுகளை விசாரித்து நீதி செலுத்தி வந்ததாகவும், கிருஷ்ணதேவராயலு பெரும்பாலும் அரண்மனையில் வீரதீரர்களாலும், கோஜாக்களாலும் சூழப்பட் டிருந்ததா யும், தாம் விரும்பிய மனைவியைப்பற்றி முதலில் கோஜா க்களிடம் சொல்லியனுப்ப, அவர்கள் போய் கோஷா பெண்