பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காலக்கட்டத்தைச் சார்ந்த இரு முக்கியமான எழுத்தாளர்களையும் அவர்களின் படைப்புகளையும் கவனிக்கவேண்டும். அதில் ஒருவர் சென்னையைச் சேர்ந்த நாரணதுரைக்கண்னன். அடுத்தவர் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை தி.ஜ. ரங்கநாதன்..” என்று குறிப்பிடும் ‘சிறுகதைத் தோற்றமும் வளர்ச்சியும் கட்டுரையாளர்களின் கூற்றை’ இங்கே கவனமாக நோக்கவேண்டும். இலக்கியத்திற்கு முன்னோடிகள் என்று குறிப்பிடப்படும் சிலரில் குறிப்பிடத்தக்கவர்கள் தஞ்சையில் முகிழ்த்த இலக்கியவாதிகளாகவே இருக்கிறார்கள்.

இந்த முன்னோடிகளின் வழித்தடத்தை ஒட்டி சிறுகதை வடிவத்திற்கு பலம் சேர்த்த, சேர்த்துக் கொண்டிருக்கும் படைப்பாளிகளின் பட்டாளமே ஒன்று உண்டு. இவர்களையெல்லாம் ஒன்று திரட்டி, அவர்களின் வாழ்க்கைக் குறிப்போடு அவர்கள் சிறுகதை இலக்கியத்திற்கு அளித்துள்ள பங்களிப்பைப் பதிவு செய்யும் போது அவர்களின் சிறுகதை ஒன்றையும் தொகுத்திருக்கிறேன்.

சிறுகதை, கதைவெளிப்பாட்டின் உள்வட்டத்திலும் அதன் புறநோக்கிலும் படைப்பு தொடர்பான நிகழ்வுகள், மைய இயக்கங்கள் யாருக்கேயேனும் அல்லது தனது குழுவினரைத் திருப்திப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும், பணத்திற்ககாகவும், பகட்டிற்காககவும் ஆசைப்படாமல் கலைவெளிப்பாட்டை முதன்மைப்படுத்திய இலக்கியவாதிகளின் சிறுகதைகளை மட்டுமே தேர்வு செய்யவேண்டும் என்ற இலக்கில்...

இவ்விலக்கின் எதிர்முகமாய் எழுதிக்குவித்தவர்கள் கூட அவர்களை அறியாமலேயே சிறந்தச் சிறுகதைகளைப் படைத்திருக்கக்கூடும். அத்தியூத்தாற்போல வெளிப்பட்டிருக்கும் அந்தச் சிறுகதைகளைக் காட்டிலும், தொகுப்பில் உள்ள சிறுகதைகளில் ஓரிரண்டு கலைவடிவம் குறைவுபட்டிருக்கும்போது அந்தக் கதைகளையும் சேர்த்திருக்கலாமே என்று சொன்ன என் இலக்கிய நண்பர்கள் கூற்றை விடுத்துவிட்டேன்.

தஞ்சையில் முகிழ்த்த இலக்கியவாதிகளின் பங்களிப்பைக் கண்டு என்னால் பிரமித்துப்போக முடியவில்லை. காலங்காலமாய் தஞ்சை தமிழகத்தின் நெற்களஞ்சியமாய் போற்றப்பட்டு வருகிறது. அதற்குக் காரணம் காவிரி நதியின் வளமூட்டத்தாலும், மருத நிலத்தாலும் மட்டுமே இந்தப் பெருமை கிட்டிவிட்டதாக நான் நம்பவில்லை.

மருதநிலத்தையே தங்கள் ‘வாழ்க்கை’யாகக் கொண்ட வேளாண் மக்கள், முதன்மையானவர்கள். அவர்களின் பண்பாட்டுக்கூறுகளை படைப்பிலக்கியம் உள்வாங்கிக் கொண்டு