பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

167


அதை அவன் ஏற்பதில்லை. ஆணும் ஒரு புதிர்தான் என்பதுஅஅவன் கருத்து. ஆனால் ராஜம் என்னவோ அவனுக்கு ஒரு புதிராகவே இருந்தாள். அவனை மணந்த நாள் முதல், அதாவது அவளுடைய திவ்யமான செளந்தரியம் அவன் வாழ்க்கையின் சுகதுக்கங்களைப் பங்கிட்டுக் கொள்ளும் என்பதாய் அக்னி சாட்சி சொன்ன நாள் முதல் இன்று வரையில் மூன்று வருஷங்கள். கழிந்துவிட்டன. அவனால் அவளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவன் கதையையும், கவிதையையும் எழுதுகிறான். நெஞ்சிலுள்ள நுணுக்கமான மர்மங்களையும் அலசுகிறான் எனப் பெரிய விமர்சகர்கள் கூடக் கூறுகின்றனர். ஆனால் அவளுடைய விசித்திரமான போக்கு அவனுக்கு அர்த்தம் ஆகவில்லை.

அவளுடைய அழகு அவனுடைய கற்பனைக்கு உரம் அளித்தது; கவிதைக்குக் கண் வைத்தது; கதைகளுக்கு மெழுகு பூசியது. ஆனால் அவனுடைய நெஞ்சுக்கு வெறுமையைத் தான் அள்ளித் தந்தது. அவள் மனப்பூர்வமாய்த் தன் வாழ்க்கையில் கலந்துகொள்ளவில்லை என்றுதான் அவனுக்குப் பட்டது.

மனப்பூர்வமாய்க் கலக்கிறாள் என்றால் அவனுக்கு ஏன் மன அமைதி கிடைக்கவில்லை? அழகு சிரித்தால் அமைதி கிடைக்கும்; அழகு அழுதால்? அழகின் மனக்குறை போதுமே வாழ்க்கையைப் பாழ்படுத்த.

அவளுக்கு அப்படி என்னதான் மனக்குறை? விருந்தாளி போன்ற மனப்பான்மையுடன் அவனுடன் அவள் பழகுவானேன்? வாழ்க்கையைக் கூட்டு வியாபாரம் எனக் கற்பனை செய்தால் அதில் முதல் போட்ட முதலாளி யார், வேலை செய்யும் கூட்டாளி யார்? அவளை வேலைக் கூட்டாளியாய் அவன் கருதவே இல்லை. ஆயினும் நஷ்டத்தில் அல்ல, லாபத்தில்தான் அவளுக்குப் பங்குதர ஆசைப்பட்டான். அதையும் அல்லவா அவள் மறுக்கிறாள்?

ஆணின் அழகுக் குறைவு, பெண்ணுக்குக் குறையாகப்படும் என்கிறார்கள்; ஆனால் அவன் அழகன், கம்பீர புருஷன் என்று பலவாய்கள் புகழ்ந்துள்ளன. அவன் குணனனும் அல்ல. அத்துடன் மிகவும் பொறுமைசாலி. தெரிந்தோ, தெரியாமலோ, அவள் செய்யும் தவறுகளையெல்லாம் அவனைப் போல் வேறு எந்தக் கன வனாலும் பொறுக்க முடியுமோ என்பது சந்தேகந்தான். அவன் அவளைச் சினந்ததே இல்லை. அன்பினால் அன்பைப் பெறலாம் என்றே நம்பினான். எதிர்பார்த்தான்; ஏமாற்றம் அடைந்தான்.

அவள் சிரிக்காதது மாத்திரம் இல்லை. முகம் கொடுத்து அவனுடன் சரியாகப் பேசாதது மாத்திரம் அல்ல. தன்னுடைய விருப்பு வெறுப்புக்களைத்தான் அவள் பூர்த்தி செய்ய முயன்று