பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இந்திரா பார்த்தசாரதி

தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில் பிறந்த ஆர். பார்த்தசாரதி எழுத்துக்காக ‘இந்திரா’ வை இணைத்துக்கொண்டவர்.

மாறிவரும் சமுதாய அமைப்பில் பழைய மரபின் பிரதிநிதிகள் வீழ்ந்துபடுவதும், குடும்ப உறவின் வலிய பந்தங்கள் விலகி விடுவதுமான உறவுமுறைச் சிக்கல்கள் - சிதைவுகள், தனக்குத்தானேயும், தனக்கும் சமூகத்திற்கும் முரண்பட்டு அந்நியப்பட்டுப் போகின்ற தனிமனிதர்களின் பிரச்சனைகள், பாலியல் விவகாரங்கள் முன்னிருந்த கட்டுதிட்டுக்களிலிருந்து சுதந்திரமாகிய நிலைமைகள்... வாழவேண்டி இருப்பதால் மனிதன் போடவேண்டியதைப் போட்டுக் காட்டுகிற போலி வேஷங்கள் எத்தனையோ?

புதிய மாறுதல்களுக்கு இடங்கொடுத்த பழம்மரபின் கட்டுக்களை உடைத்தெறிககின்ற கிளர்ச்சித் தன்மைகள், அரசியல் பொய், பித்தலாட்டங்களுக்கு உரிய இடமா மாறிவிட்ட வருந்தத்தக்க தன்மை நகர நாகரிகத்தின் மதிப்புக்கள் நகரங்களில் மட்டுமின்றி கிராமங்களின் நடைமுறை வாழ்க்கையிலும் ஏற்படுகின்ற பாதிப்புக்கள் போன்ற நகர்ப்புறச் சமுதாய மாற்றங்கள் அடிப்படையாகக் கொண்டுள்ள சில பிரச்சனைகளை இந்திரா பார்த்தசாரதி கையாண்டுள்ள முறைமையைப் பற்றி மிகத்தெளிவான ஒரு ஆய்வு நூல் வெளிவந்துள்ளது.

இதுபோன்ற ஆய்வு நூல்கள் எல்லா எழுத்தாளர்களுக்கும் வரவேண்டும் என்ற ஆசை இந்த தமிழ்ச் சூழலில் நிறைவேறுமா என்பது கேள்விக்குறியே...

சாகித்திய அகாதமி விருது பெற்ற ‘குருதிப்புனல்’ கீழத்தஞ்சை மாவட்டத்தில் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த விவசாயிகளின் பிரச்சனைகளையும் சமூகச் சூழலையும் மையம் கொண்டு எழுதப்பட்டு இருப்பதாகக் காட்டியிருப்பது போலியானது முழுமையானது அல்ல. அவர் வெளிப்படுத்தியிருக்கும் களமும் சரி மக்களும் சரி அவர் தூரத்தில் நின்று பார்த்த சாயல்கள் மட்டுமே நிழலாக...