பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

242

சோலை சுந்தரபெருமாள்


ஏழெட்டு டூரிஸ்ட் பஸ் விடுகிறான்... கேள்வி முறையில்லை... தன் தலையெழுத்து, வேறு வேலை கிடைக்கவில்லை. இந்தத் திருட்டுக்குத் தானும் உடந்தை... சைக்கிளுக்குக் காற்று அடித்துக் கொண்டிருந்த பயல், இவனுக்கு வந்த அதிர்ஷ்டம் இன்று தன்னைக் கேள்வி கேட்கும் நிலைக்கு வந்துவிட்டான்!.

இன்ஸ்பெக்டரும், முதலாளியும் ஆஸ்பத்திரியின் பின்பக்கம் சென்று சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். ராஜூ வேலுவிடம் கிசுகிசுத்தான்; “முதலாளி சமாளிச்சிடுவாரு, பயப்படாதீங்க...”

“சமாளிக்கிறதுக்கு என்ன இருக்குது?”

“யார் யாருக்கு எங்கெங்கே கை ஊறுதுண்ணு முதலாளிக்குத் தெரியும்...” இதைச் சொல்லிவிட்டு ராஜூ புன்னகை செய்தான்.

இந்தப் பயலுக்கா தன் பெண்னைக் கொடுக்க வேண்டுமென்று ஒரு கணம் யோசித்தான் வேலு.

தம்பியின் அம்மா ஓரமாக ஒரு பெஞ்சியில் உட்கார்ந்து கொண்டு கண்கள் மூடிய நிலையில் இருந்தாள். வாய் முணுமுணுத்துக் கொண்டிருந்தது.

இன்ஸ்பெக்டர் வேலுவிடம் சொன்னார். “என்ன நடந்ததுன்னு முதலாளி எழுதித் தருவாரு... கையெழுத்துப் போட்டு என்கிட்ட கொடு.”

“சம்பவம் நடந்த இடத்திலே முதலாளி இல்லே... நான்தான் இருந்தேன்... ஆக்ஸிடென்டுக்கும் நான்தான் காரணம்.”

முதலாளி வேலுவை முறைத்துப் பார்த்தான்... அவனுடைய கோபம் முகத்தில் தெரிந்தது.

“வேலு. இப்படி வா என்னோட...”

இருவரும் ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்தார்கள். வைச்சான்னா, நீ ஜெயிலுக்குப் போகும்படியா ஆயிடும்... புரிஞ்சுதா... நான் சொல்றபடி கேளு...”

“அதைப்பத்தி நான் கவலைப்படலிங்க... நான் செஞ்ச தப்புக்கு...”

முதலாளி சீறினான். “மூளை இருக்குதா, இல்லியா உனக்கு? ஒம்பது குழந்தைகளை வைச்சிகிட்டு அரிச்சந்திரனா இருக்க முடியுமா உன்னாலே? சொல்வதைக் கேளு. நான் இப்படி எழுதித்தரேன், கையெழுத்துப் போடு...”

“என்ன எழுதித் தருவீங்க?”

“கால உசர வைச்சிக்கிட்டிருந்த பையன் திடீர்னு தொங்கப் போட்டுட்டான்... மற்றபடி கோர்ட்லே கேஸ் வந்திருச்சின்னா, வக்கீல் பார்த்துப்பாரு. பையனுக்கும், அம்மாவுக்கும் சண்டை, அது இதுன்னு... எத்தனையோ வழி