பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

259


நேரமும் கடந்து கொண்டிருந்தது. இனிமேல் பஸ் இல்லை என்றதும் வசதியுள்ளவர்கள் கூட்டணியாய் டாச்சி ஸ்டாண்டுக்குப் போனார்கள். சிலர் லாரியை மறிக்கலாம் என்று சாலையில் இறங்கினர்.

“தீபாவளியும் அதுவுமா லாரி எங்க வரப் போவுது” அவநம்பிக்கையில் சிலர் தயங்கினர். பஸ் ஸ்டாண்டு மக்களால் நிரம்பிக் கிடந்தது. தஞ்சாவூர்க் கதம்பமும், மல்லிகையும் முகம் வாடிச் சுருண்டு கிடந்தன. கடைக்காரர்கள் அதில் தண்ணீர் தெளித்தனர். எடை பார்க்கும் எந்திரத்தின் ‘பளிச் பளிச்’ என்ற விளக்கொளி கண்ணைக் கூசியது. ஊனமுற்ற பிச்சைக்காரர்கள் அந்த நேரத்திலும் காசுக்காக நின்று நின்று நகர்ந்தனர். வெளியூரிலிருந்து வரும் பஸ் எல்லாம் ஷெட்டுக்கு விரைந்தன. இளைஞர்கள் தியேட்டர் பக்கம் நடை கட்டினார்கள். பஸ் ஸ்டாண்டு கடைகளும் மூடப்பட்டன. கூட்டம் கொஞ்சம் கொஞ்சமா அசமடங்கியது. மூடிய கடைகளின் முன் படுக்க பலர் இடம் பிடித்தனர். மற்றவர்கள் நடைபாதையிலேயே கால் நீட்டினர்.

முருகேசன் பட்டாசுப் பையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு ஓரமாகப் படுத்தான். பஸ் ஸ்டாண்டு வெளிச்சமும், வெடிச்சத்தமும் அவனைத் தூங்க விடவில்லை. நினைவும், கனவுமாக அவன் புரண்டு கொண்டிருந்தான்.

அவன் அக்கா வீட்டிலேயே தங்கிவிட்டதாக ஊரில் அப்பாவும், அம்மாவும் நினைப்பார்கள். அதுவும் ஒரு வகையில் நல்லது தான். இல்லையென்றால் அப்பாவை விட அம்மா ரொம்பவும் கவலைப்படும். கிராமத்தில் பொழுது பட்டும் அவன் வல்லேனா, வீட்டில் இருந்தே அம்மா கூப்பாடு போடும். குளத்தங்கரையில இருந்தாலும் அவன் ஓடி வருவான். இதுவரைக்கும் தீபாவளிக்கு அவன் வீட்டில் இல்லாமல் போனதில்லை.

அப்பா எங்காவது கடன் வாங்கிக்கிட்டு வந்து வாடா பட்டாசு வாங்கப் போவோம்னு டவுனுக்குக் கூட்டிக்கிட்டுப் போவாரு. தீபாவளி டவுனே பார்க்க வேடிக்கையா இருக்கும். பட்டாக கடையில கூட்டம் தாங்கமுடியாது. கூட்டத்திலேருந்து நூறு இருநூறு ரூபாய்கெல்லாம் வெடி வாங்கிகிட்டு இருப்பாங்க. கூட்டம் குறைஞ்சு இவன் கிட்டே போவும் போது அவன் வாங்க நினைச்சதெல்லாம் தீர்ந்து போயிருக்கும். கடைகடையா ஏறி இறங்கி அடுத்த தீபாவளிக்குப் பாத்துக்கலாம்னு அப்பா ஆறுதல் சொல்ல அவனும் திரும்பி நடப்பான்.

சரின்னு திரும்பி துணி எடுக்கப் போனா, நடைபாதை பூரா ரெடிமேடு துணிக்கடை. அங்கேயும் கூட்டம்தான். அப்பா கையிலுள்ள பணத்திற்கே துணி தேடுவார். எப்பவும்