பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

263


“தலைத் தீபாவளிக்கு வேட்டி, புடவை எல்லாம் வாங்கியாச்சு. அக்காவுக்கு அரக்கு நெறத்துல புடவை எடுத்திருக்கு. திடீர்னு அப்பாவுக்கு ரெண்டு நாளா காய்ச்சல். அப்புறமா அம்மாவுக்கு அம்மாவாத்துப் போச்சு. அதான் அப்பா வர முடியலை. என்னை சீர்மட்டும் குடுத்துட்டு வரச் சொன்னாங்க. தலைக்குத் தண்ணி ஊத்துனதுக்கப்பறம் அழைக்க வர்றோம்னு சொல்லச் சொன்னாங்கன்னேன்!”

அம்மா ‘ஊம்’ கொட்டி கேட்டது.

“அவுங்க என்ன சொன்னாங்க?”

அப்பா மீண்டும் கேட்டார்.

“ஒண்ணும் சொல்லலை. அக்கா தான் என்னைத் தனியா கூட்டிப் போயி ‘அப்பாவுக்கு இப்போ எப்படி இருக்குன்னுச்சு? நான் அதுகிட்டே அப்பாவுக்கு ஒண்ணுமில்லே. கேட்ட எடத்திலேருந்து அப்பாவுக்குப் பணம் கெடைக்கலை. அதனால வேட்டி, புடவையெல்லாம் வாங்க முடியலை. அப்பாதான் இப்படி சொல்லச் சொன்னுச்சுன்னேன்!”

“அக்கா மாமியா என்ன சொன்னுச்சு?”

அம்மாவின் பங்குக்கு ஒரு கேள்வி வந்தது.

“நான் போனப்பு அவுங்க இல்லை. மொதத்தாரத்து புள்ளைகளுக்கு வளையல் வாங்கப் போயிருந்தாங்க”

“அப்புறம்...”

“அப்புறம் அத்தானுக்கும் நெலமை தெரிஞ்சிபோச்சு, அக்கா சொல்லிச்சு”

மெளனம் கனத்தது. முருகேசன் கலைந்தான்.

“ஆனா... அத்தான் வந்து, நீ இதெல்லாம் சொல்லாதே, எங்கம்மா வந்ததும் தலைத் தீபாவளிக்கு அழைச்சிக்கிட்டுப் போவ நீ வந்திருக்கிறதா சொல்லுன்னாரு அழைச்சிக்கிட்டுப் போனா அப்பா என்னைத் திட்டும்னு சொன்னேன். நீ சும்மா கூப்புடு, நாங்க யாரும் வரமாட்டோம்னு சொன்னாரு. அவுங்க அம்மாவுக்கு மட்டும் தெரிய வேணாம்னாரு. சரின்னு நானும் அழைச்சேன்?

“அக்கா மாமியா என்ன சொன்னாங்க?”

“விடிஞ்சா தீபாவளி இப்ப வந்து கூப்புட்டா எப்படின்னாங்க? ஒடனே அத்தான் தான் மாமாவுக்கு எதோ ஒடம்பு சரியில்லையாம். அதனால தான் முருகேசனை அனுப்பியிருக்காங்கன்னு சொன்னாரு. ஒடனே அவுங்க சரி அப்படின்னா நீ ஒம் பொண்டாட்டியக் கூட்டிக்கிட்டுப் போயிட்டு வான்னாங்க. எனக்கு தின்னுக்கு ஆயிடுச்சி.

“அதெல்லாம் நான் புள்ளைங்களையும், ஒன்னையும் விட்டுட்டுப் போவ முடியாது. வேணும்னா அவன் அக்காவை அழைச்சிக்கிட்டுப் போவட்டும்னு அத்தான் சொல்ல, நீங்க