பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

304

சோலை சுந்தரபெருமாள்


ராசாதி ராசா வந்துச்சே - அதுவுங்கூட
சந்த்ரமதி பொண்ணு வந்துச்சே - அதுவுங்கூட
லோகிதாசன் குஞ்சி வந்துச்சே
கார்ல கறுக்கன் மார்ல பறக்கம்

அப்டின்னு தமிழ கொல பண்ணி பாடுவானுங்களாம்.

கால கறுக்கன்னா என்னா மார்ல பறக்கம்னா என்னா தெரியுமா? காதுல கடுக்கன். மார்புல பதக்கம். புரிஞ்சிச்சா சங்கதி! எடுத்துப் பாடுற பின்பாட்டுக்காரனுங்கூட அதையேத்தான் திருப்பி திருப்பி பாடுவானுவளாம். கேக்குறவனுக்கு மதி எங்க போச்சி. என்னமோ வாக்கியத்தக் கண்டான் வர்ணத்தக் கண்டான் கேக்க ரஞ்சிப்பா இருந்தா சரிதான்னு பாட்ட கேப்பானுவளாம். இந்தக் கூத்தையெல்லாம் கண்டு மனம் நொந்துபோயிதானோ என்னமோ தமிழ் நாட்டுல அநேகம் பேர நாடாவம் நடிக்க வந்தாங்களாம். அப்புடி வந்தவங்கள்ல இன்னும் தங்கசாமி நெனப்புல இருக்குற பேரு அநேகம் உண்டு. ராஜபார்ட்டுன்னு வச்சிகிட்டா ‘கஞ்சனூரு முத்துக்குமர பத்தர்’, ‘பிளேட்டு கதிரேசம் பிள்ளை’, இவுரு எப்புடின்னாக்கா, அரிச்சந்திரா நாடாவத்த ஆகமப்படி ஏளு நாளக்கி நடத்துவாராம். நாடாவப் பாட்டை எசத்தட்டுல கொண்டாந்தவரும் அவுருதானாம். அதனாலத்தான் அவருக்கு ‘பிளேட்டு கதிரேசம்பிள்ளை’ன்னு ஆச்சாம். முட்டம் பெரியசாமி, மதுர உடையப்ப தேவரு, பசுபதி கோயிலு கதிரேசன் காடவராயரு, புதுக்கோட்ட முத்துமணி பாகவதரு, திருப்பாமாபுரம் முருகைய்யன், திருவிழி மழலை எம்மெம் மாரியப்பா நந்தன் சரித்திரத்துல பலே கெட்டிக்காரராம். நவாப் ராஜமாணிக்கம், டி.கே.எஸ்.சகோதரர்கள் இப்புடின்னு அநேகம் பேரு ராஜபார்ட்டுல கெட்டிக்கார ஆசாமிகளாம். இதுல மொட்ட வாத்தியாரையும் அவசியமா சேத்துக்கணும். ஸ்திரீபார்ட்டுக்கு பேர் போனவங்க காக்காமுளி கோயிந்தசாமி பிள்ளை; சன்னாவூரு செல்லம். வடுவூர் கண்ணம்மா, மாயவரம் இந்திரா இவுங்கள்லாம் ஸ்திரீபார்ட்டுல எக்ஸ்பர்ட்டாம். பின்னையும் சில்ற ஆக்கிட்டுகளுக்கு காரமேட்டு கண்ணு, வெண்ணூர் சாமிதொரை, டான்சு மற்றும் காமிக்கிக்கு ஆடல் அழகி அபிநயசுந்தரி, திருவாளூரு மோகனா, மதுர மல்லிகா, புதுக்கோட்ட பத்துமா இப்புடின்னு வந்தாங்களாம். தஞ்சாவூரு வடக்கிவாச நாடிமுத்துராவ் வகையறா கூட டான்சு கீன்சுன்னு அமுக்களப்படுத்துவாங்களாம். ஆர்மோனியம் புண்ணிய நல்லூர் சித்திரவேலு, தங்கசாமிக்கு ஸ்திரீபார்ட்டா கூட ஆக்கிட்டு பண்ணிருக்காராம் இந்த சித்திரவேலு தபேலா - டோலக்கு - கோடையிடி மாரிமுத்து. ரெண்டு கண்ணும் தெரியாத மனுசன்தான்னாலும் தபேலாவும், டோலக்கும் இவுருகிட்ட சங்கதி பேசுமாம். ஐயம்பேட்டை கிருஷ்ணமூர்த்தியும், தபேலா டோலக்குல கெட்டிக்காரராம். வுட்டுப் போச்சுல்ல ஆர்மோனியம் பொட்டில