பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 இளைய திவான் சாயேபுக்கு மன்னர் அளித்து அதில் உட்காரவைப்பார். இரண்டு வேறு ஹெளதாக்களில் ரெஸிடெண்டு சாயேயும் டாக்டர் சாயேயும் அமர்வர். அப்பொழுது சிப்பாய்கள் எல்லோரும் "ஜோஹர் பரங்க ஜோஹர் யந்த்ர" என்று கூறுவர், "ஹர ஹர மஹாதேவ" என்று கூறித் தம்மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். பின்னர் இளைய திவான் சாயேயின் கொடியேற்றிய யானையும் அதன் பின் அவருடன் வந்தவர்களும் ஒருங்கு சேர வேண்டும். மன்னருடன் வந்தவர்கள் வரிசையாக ஒருங்கு சேர்ந்து செல்லவேண்டும். அப்பொழுது கார்பார் முதலியவர்கள் மன்னரிடம் வந்து மரியாதை செலுத்தித் தம் இடங்களுக்குப் போகவேண்டும். செள. மா. பாயி சாயேப் அவர்களுடைய பல்லக்கு முன், ஹாஜாரின் சவாரி: ஹாஜுர் இங்கிலீஷ் தேசத்துக் குதிரையில் சவாரி செய்வார். அவர்களுக்குப் பின் குதிரையில் ஏறும் பெரிய கார்பாரிகள், அவர்களுக்குப் பின் பார்சீர்கள்(?) அவர்கட்குப் பின் "கில்லே தார்கள்', அவர்கட்குப் பின் பல்லக்குகளும் வண்டிகளும் வருதல்வேண்டும். இந்த முறையில் சவாரி வருங்கால் யாவரும் தம் சவாரியைக் குறுக்கே கொணர்ந்து முறையைக் கெடுக்கக்கூடாது. குறிப்பு:- இந்தச் சந்திப்பு விவரங்களைப் படம் போட்டுக் காட்டியிருப்ப தாக அந்த ஆவணத்தில் ஒரு குறிப்பு இருக்கிறது. மோடிக் கட்டுக்களைப் பார்ப்பின் கிடைக்கலாம். மேலே விவரித்த முறையில் நடந்தேறவும் இரு சாராரும் விளங்கிக் கொள்ளவும் வஜராத்மா பாபுராவ், அமிருதராவ் இங்களே ஆகியோர் ஒருநாள் முன்னே வந்து படத்தில் கண்டவண்ணம் இரு சவாரி களும் சேரும் விதத்தை நன்கு விளக்குவர் - என்றுள்ளதால் ஒருநாள் முன்ன்தாகவே ஒத்திகை (rehearsal) நடந்ததாதல் வேண்டும். -.

  • -

_ மன்னர் தஞ்சையை அடைந்தமை ਾਂ --- திருவையாற்றிலிருந்து o 28-4-1822இல் எழுதிய எழுத்தினின்று: மறுநாள் அதாவது 24-4-1822இல் மன்னர் தஞ்சையை அடைந்தார் என்று அறியவருகிறது. - -: ് முகாம் திருவையாறு 23-4-1822 : ஹ-ஜாரின் சவாரி நாளை புதன்கிழமை 3 மணிக்கு இங்கிருந்து புறப்பட்டு 4 நாழிகைப் பொழுது இருக்கும்போதே கோட்டைக்கு வரப்போகிறார். ஆகையால் பட்டணத்தை அலங்காரம் செய்தும், அரண்மனையில் தோரணம் வாழை மரம் கட்டிப் பூரண கலசம் வைத்து அலங்கரித்தும், இரவில் சாப்பாடு தண்ணிர் வகையரா தயாரா யிருக்கும்படி ஏற்பாடு செய்யவும் ............ மாடியில் ஹ-ஜூரின் உட்காருகிற ஜமுக்காளம் விரித்துத் தயாராயிருக்கட்டும். ஹாஜார் சவாரியுடன் வெள்ளை யர்கள் வருகின்றார்கள். மாடியில் நாற்காலிகளைப் போட்டுச் சபை சித்தமாய் இருக்கவேண்டும். புஷ்பம், நெட்டி 15, சந்தனம் வெற்றிலை, பன்னீர், அத்தர் சித்தமாயிருக்கட்டும். இவைகளில் அத்தர்தானி என்பதை இவ்விடம் இருந்து அனுப்புகிறோம்" 46, 5-40 - _