பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 யினின்று தஞ்சைக்கு வந்து விசாரணை செய்யப்பெற்றுத் தீர்ப்புக்கூறப் பெற்ற வலங்கை இடங்கைப்பூசல்,' சதாசிவ சானங்கே என்பவன் வேலை செய்யும் இடத்தினின்று ஓடிப்போன செய்தி,' நாட்டியக்காரி வேஷத்துடன் வந்த இரு கோஷ்டிகளுக்கிடையில் பூசல்" என்பனவாம். - அரசியலில் தலைமை வகித்தவர்கட்குச் சில மரியாதைகள் உண்டு : அன்னோர் வரும்பொழுது எதிரில் வண்டிகள் முதலியன வராமல் நிறுத்துதலும் உண்டு. ரெஸிடெண்டு பெருவழியே ஹெளதாவில் சென்று கொண்டிருந்தார் : தேவதாசி அங்கு' என்பவளின் மகள் நாகு ' என்பவள் ஒரு வண்டியில் வந்து கொண்டிருந்தாள். அவள் ஏறி வந்த வண்டி ஓரமாகப் போகாமல் ரெஸிடெண்டுக்கு rேதிரே வந்தது. ஆகவே அந்த " நாகுவு"க்கு 1 சக்கரம் 2 பணம் அபராதம் விதிக்கப்பெற்றது." குற்றம் செய்தவர்களுக்குக் கசையடி தண்டனை கொடுத்தல் பெரும் பான்மை ; சிலர் அத்தண்டனையை விரும்பவில்லை. அதற்குப் பதிலாக அபராதம் கட்டுவதற்கு வேண்டுகோள் விடுத்து அங்ங்னமே தீர்ப்புப் பெற்றது முண்டு. இதனை, ஒராவணம் விவரிக்கிறது." நீதி மன்ற அழைப்பாணை (Summons) ஒன்று மோடி ஆவணங்க ளிடையே தமிழில் கிடைத்துளது. அதன் திருத்தமான படிவம் பின்வருவது:பூரீமகாராசா சாயேபு அவர்கள் நியாயசபையார் இதன் மூலமாய் ஜயவருஷத்திய 20வ. லக்கத்தில் வாதி பிரதிவாதி கோட்டைவெளி கருந்தட்டாங்குடி செல்லியம்மன் கோவில் தெருவில் டிை தெருவிலிருக்கும் இருக்கும் சொ நாயக்கன் பெண்சாதி பரிமண்ம் சொயி பிரதிவாதிக்கு அனுப்பின அறிக்கைப் புத்திரம் என்னவென்றால், வாதி யானவள் உன் பேரில் நகை சங்கதியைக் குறித்துப்பிராது செய்திருப்பதால் அதற்கு உத்தரவு எழுதிக் கொடுத்துச் சபையில் காத்திருந்து வியாச்சியம் தீர்த்துக் கொள்ள வேண்டியதற்காக நீ உடனே நியாயசபையில் வந்து ஆஜராகவும். 1834 சூலை 2வ. ஹரிசக்கரபாணி ஜாக்கே 29-10-1855இல் சிவாஜி II இறந்ததும் மராட்டியர் ஆட்சி தஞ்சை நகரிலும் முடிவுற்றது ; நீதி மன்றங்களின் செயற்பாடும் நீங்கியது : தஞ்சை வெள்ளையரின் சட்ட ஆட்சிக்கு உட்பட்டது." 147, 2-1 முதல் 29 முடிய 148. 8-90 முதல் 106 , 10-20, 21, 26,27.28,45, 46 149. 10.47 முதல் 58 முடிய 150 1-268 1.51. 4.818, 819, 820 152. 8-11 153. Page XLIX of Appendix to Hicky's Tanjore Maratha Principality, Para 10, last sentence : " The jurisdiction of the British Courts should however extend over all the Fort ’’ 22nd Nov. 1855.