பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - 231 நாடகத்துக்கு வருகிறேன் என்று விடுமுறையில் சென்றவர் நாடக நாளன்று வராமையால் தண்டனை 12 தேங்காய்கள் வசூலிக்கப்பட்டது என்றதால் இது அறியப்பெறும்.' இதன் அதிகாரியாக 1804இல் மல்லோரி நாகோஜி என்பவர் இருந்தார்." கி. பி. 1819இல் வராஹப்பையா ராமசாமிய்யா கண் காணிப்பாளர் ஆனார்.'அ கி. பி. 1826 இல் குருவய்யா ஆதிநாராயணய்யா என்பவர் மேற்பார்வையாளராக இருந்தார்." பாகவத மேளாவில் இருந்தவர் கட்குத் திங்கள் தோறும் ஊதியம் அளித்ததோடு' 8 நாட்களுக்கு ஒரு முறை அவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளிக்க எண்ணெயும் சீயக்காயும் தரப் பெற்றனர்.' - பாகவத கேளாவிடத்தில் இசை நாடகக் கருவிகள் யாவும் இருந் திருத்தல் எதிர்பார்க்கக்கூடியதே. நாடகம் நடனம் முதலியன நடக்கும் பொழுது அந்நிகழ்ச்சிகளுக்கு உரியவர்களிடம் அவர்கள் வேண்டுவனவற்றைப் பாகவத மேளா கொடுத்து உதவும். இதனை, " தேவதாசியின் நடனத்துக்குப் பாகவத மேளாவினின்று சலங்கை நகை கொடுத்து வாங்குவது * † IHB -- என்பது வலியுறுத்தும். தஞ்சையில் மட்டும் பாகவத மேளா இருந்ததாகக் கொள்வதற்கில்லை. இந்நாளில் மெலட்டுர் பாகவத மேளா யாவரும் அறிந்ததொன்று. கிடைத் துள்ள மோடி ஆவணத் தமிழாக்கத்தினின்று மெலட்டுர் பற்றி எதுவும் தெரியவில்லை. ஆனால் மன்னார்குடியில் பாகவத மேளாவுக்குச் சுரோத் திரியம் கொடுத்ததாக ஒரு ஆவணச் செய்தி உள்ளது. ' மேனுட்டிசை தஞ்சாவூர் பியாண்டு (Band ) என்பதும் யாவரும் அறிந்த ஒன்று. 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து வெள்ளையரின் வரவு மிகுந்தமை பின் வெள்ளையரின் இசை இங்குப் பரவலாயிற்று; வெள்ளையரின் இசை நாட்டியம் இசைக்கருவிகள் இந்நாட்டில் பரவலாயின. வெள்ளையர் தம் இசைக்கருவிகளை இயக்கிப் பரிசு பெற்றனர். இந்நாட்டவரும் ஹிந்துஸ்தானி இசையில் பயிற்சி பெற்றாற்போன்று மேற்கத்திய இசையிலும் பயிற்சி பெறலாயினர். == 1770 மேஸ்தர் அந்தோனி என்ற வெள்ளைக்காரன் சாபத் வாத்தியம் வாசித்தற்கு ரூ. 5 '" 1-3. ச. ம. மோ. க. 14-80 144. ச. ம. மோ. க. 10-89 18-104 ;28.65 .ச. ம. மோ. த .145 19-6 ;18-25 . تیر .Gu T .طا ,ی .ھے144 "45. 4-46 147. ச. ம. மோ. த. 7-27 148, 5-487; 1-842; ச.ம.மோ.த. 24-22 149 2.221 150. ச. ம. மோ, த. 8-9