பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

289 கி. பி. 1848இல் தெற்குவிதியில் வெங்கட்டராவ் போயியிடம் விலைக்கு வாங்கிய வீட்டில் புதிதாக ஆரோக்கிய சாலை வைக்கப்பட்டுள்ளது" என்ற குறிப்பால்" உறுதிபெறும். இந்தத்தெற்குவீதி ஆரோக்கிய சாலையில் மருத்துவராகயிருந்த புருகிங் திங்கள் ஒன்றுக்கு ரூ. 700 ஊதியம் பெற்றுவந்தார்; ஆனால் 1-11-1855 முதல் மாதம் ஒன்றுக்கு ரூ. 500 கொடுக்கப்படவேண்டும் என்று ஓர் ஆணை பிறப்பிக்கப்பட்டது." தன்வந்தரி மகால் ஆரோக்கிய சாலை என்பது இந்நாட்களில் உள்ளதுபோல் பொது மக்கள் சென்று வைத்தியம் செய்துகொள்ளும் மருத்துவ சாலை ஆதல் வேண்டும். இதனின் வேறாகத் தன் வந்தரி மகால் என்று ஒரு மகால் இருந்தது. அங்கு மக்கள் விலங்குகள் பறவைகள் ஆகிய எல்லாவற்றுக்கும் வைத்தியம் செய்யக் கூடிய வைத்தியர்கள் இருந்து ஆய்வு செய்தனர். ஆதல் வேண்டும். இதனை, - - --- தன்வந்தரி மகால்-வைத்தியர்களின் சங்கதிகளை எழுத யுத்தசாலை யிலிருந்து நகல் கடுதாசிகள் 4; ஹ-ஜார் மகாலிலிருந்து பேனா 4; பென்சில் 4 ' என்ற 1834க்குரிய குறிப்பு" வலியுறுத்தும். அந்தத் தன்வந்தரி மகாலில் வைத்தியர்கள் பல மருந்துகளைச் செய்து வந்தனர். ஆதல் கூடும். இதனை, 34. ச. ம. மோ. க. 2.80 35. ச. ம. மோ. த. 4-29 புதிதாக ஆரோக்கியசாலை ' என்றமையால் இதற்கு முன்னர் ஆரோக்கியசாலை இருக்தது என்பது போதரும். சரபோஜி ஆரோக்கிய சாலை நிறுவியிருந்தார் என்பது, " மதமுகவன் கம்பியறு முகவன் கந்தன் மலர்ப்பாதங் தனைப்போற்றி வைய கத்தோர்க் கிதமுறவென் றாரோக்ய சாலை யொன்றை ஏற்படுத்தி முன்முனிவர் சித்தர் யோகர் பதமுறவே சொல்லியநூல் தம்மை யெல்லாம் பார்த்துணர்ந்து நாடோறும் சரப பூபன் முதல்வனிச்ச யித்தபடி சிசோரோ கந்தான் - மொழியஅயன் தேவிகலை வாணி காப்பாம் ' - என்ற சரபேந்திர வைத்தியச் செய்யுளால் அறியப்பெறும். - சரபேந்திர வைத்திய முறைகள் - சிரோரோக சிகிச்சை, காப்பு, செ. 2 36, 1-280 37