பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 இக்கடிதத்தினால் இரண்டாம் சரபோஜிக்கும் நாநாசாகேபுக்கும் மனவேற்றுமை இருந்தது என்றும், அதனால் " கவர்னர் கெளன்சிலுக்கு ' எழுதினார் என்றும் தெரிகிறது. பகைமையிருப்பினும் " ஏகோஜியின் வமிசத்தார் " ஆகையால் மற்றவர்கட்கு உதவித்தொகை கொடுத்தமைபோல நாநாசாகேப் அவர்களின் செலவுக்கு மாதம் 1க்குச் சக்கரம் 500 கொடுக்கப் பெற்று வந்தது என்று 1801க்குரிய ஆவணக்குறிப்பு' அறிவிக்கிறது. பிரதாப சிங்கர் மோடி தமிழாக்கக் குறிப்பு ஒன்றில்' ' பிரதாபசிங்க் பட்டாபிஷேகம் 1740 என்றுள்ளது. போன்ஸ்லே வம்ச சரித்திரத்தில்" " சகம் 1660 (கி. பி. 1738) சித்தார்த்தி வருஷம் பிரதாபசிங்க ராஜாவுக்குப்பட்டம் சூட்டி னார்கள் " என்று கூறப்பட்டமையாலும், பிற்காணும் மோடி தமிழாக்கத்தில்', 1789 : ரா பிரதாபசிங்க் அநந்த நாராயண சாஸ்த்திரிக்குச் சந்திரக்கிரகண காலத்தில் பூமிதானம் திருவிசநல்லூர்-மேலக்காவிரியில் நன்செய் 2 வேலி புன்செய் வேலி " என்று கி. பி. 1739இல் செய்த தானம் குறிப்பிடப் பெற் றிருப்பதாலும், மேலேகண்ட 1740 என்றது தவறு என்பதில் ஐயமில்லை. இவர் பட்டத்துக்கு வந்ததை நினைவுகூர்.தற்பொருட்டுத் திருவிசநல்லூர் அநந்தநாராயண சாஸ்த்திரிக்கு நிலக்கொடை தந்தனர் என்று கொள்ளலாம். பிற நிலக்கொடைகள் . மேலும் இவ்வரசர் கி. பி. 1742இல் குத்தாலத்தில் நாராயணாசாரிக்கு 14 வேலி சர்வமானியமாக அளித்தார்." தரணி மாகாணத்தில் நன்செய் வேலி புன்செய் 2; மா காசிவாசி சாஸ்திரிக் குச் சர்வமானியம் கொடுத்தார். 1745இல் தரணி மாகாணத்திலேயே 12 பிராமணர்களுக்கு நன்செய் 91 வேலி புன்செய் வேலி 1க்கு : வேலி வீதம் அளித்தார்." கி. பி. 1751இல் இராமேசுவரத்தில் சத்திரம் தண்ணிர்ப்பந்தல் நந்தவனம் ஆகிய அறங்களை நிறுவினார். இங்ங்னம் இவரது நிலக் கொடைகள் பல. 28. ச. ம. மோ. த. 2-19 29. 3-323 30 பங்கப. 86 31. 3-144, 145 32. ச. ம. மோ, த. 5-12 33, 8–178 3.1. 8–165 35. 3-143 முதலாம் சரபோஜி (1710-1728) ஆதரித்தவர்களுள் ஒருவர் பஞ்சரத்னம் அகக்த காராயண சாஸ்திரி ' என்பவர் ஆவர். இவரே பிரதாப சிங்கர் காலத்தில் நிலக் கொடை பெற்றவர் ஆகல் கூடும். திருவிசகல்லூரில் நிலக்கொடை பெற்ற 45 பேரில் இவரும் ஒருவர். பக்கம் 88, 89, 45 - சரபோஜி விலாஸ் - பதிப்பாசிரியர் டாக்டர் வி. ராகவன், சரஸ்வதி மகால் வெளியீடு (1952)