பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 இராமச்சந்திரராவ் சிவாஜி ஸர்ஜேராவ் காட்கே என்றொருவருடைய பாட்டனாருக்குப் பிரதாபசிங்கர் காலத்தில் சுரோத்திரியம் செய்து கொடுக்கப் பட்டது. அந்தச் "சிகாசன்னதுகள்" காணாமற்போய்விட்டன. ஆகையால் அந்த நிலங்களைப் பிறர் தம்வசப்படுத்தலாயினர். ஆகவே அச்" சிகாசன்ன துகளின் உண்மைப்படியை எடுத்துக்கொடுக்கவேண்டும் என்று கி.பி. 1822இல் கேட்டுக்கொண்டிருக்கிறார். இந்த நிலக்கொடை அறந்தாங்கிக்கு அருகில் ராஜேந்திரபுரத்தில் அளித்ததாகும்." மனைவியர் : இவருக்கு மனைவியர் ஐவர் என்று போன்ஸ்லே வம்ச சரித்திரம் கூறும் (பக்கம் 82), ஒரு குறிப்பில் யமுனாபாயி சக்வார்பாயி ஆகிய இருவர் பெயர் மட்டும் காணப்பெறுகிறது. பிறிதோர் ஆவணத் தமிழாக் கத்தில் சக்வார்பாயி சாகேபுக்கு 1758இல் திரிபுவனச் சத்திரத்துக்கும் அக்கிர ஹாரத்துக்கும் 5028 சக்கரம் மொயின் செய்து கொடுத்ததாகவும், அதற்காகத் தேப்பெருமாநல்லூர் சர்வமானியம் வழங்கியதாகவும், 1759இல் திரிபுவனம் சத்திரத்துக்குப் பக்கத்தில் அக்ரஹாரம் உண்டுபண்ணத் தாராசுரத்தில் புன்செய் 6 வேலியும், சுரங்கம் பேட்டையில் மரத்தடி நிலம் 2 வேலியும் அளித்ததாகவும் கூறப்பெற்றுள்ளன. 1798 : பிரதாபசிங்கர் மனைவி கிருஷ்ணாபாய் இவர் தம்பி துப்குல்ராம சந்திர ந்யா-12; ; மலிவேக மன்யா 7, 1 ஆக (சக்கரம்) 20" என்றொரு குறிப்புள்ளது. மேலும் ஒரு குறிப்பு: 1802, கைலாஸ்வாஸி பிரதாபசிங்கின் ஸ்திரிகள் இருவரின் தம்பி சக்கரம் 33-34" என்பதாகும்." பிரதாபசிங்கரின் மனைவியருள் ஐவர் பெயர் அறியவருகிறது." கிருஷ்ணாபாய் பெயர் அவர்களுள் சேர்க்கப்பெறவில்லை. ஆகவே கிருஷ்ணாபாய் மணம் செய்து கொண்ட மனைவியாதற்கில்லை. மராட்டிய சாதியிலிருந்தும் நாயுடு சாதியி லிருந்தும் சேர்த்துக் கொள்ளப் பெற்றவர்கள் எழுவர் ஆவர். அவர்களுள் கிருஷ்ணாபாய் ஒருவராதல் கூடும். திருவிடைமருதூர்த் தேர் : ( இற்றைநாள் பழுதுற்றிருக்கிற) தேர் பற்றி 18-10-1862இல் ஆங்கில அரசாங்கத்துக்கு ஒருமடல் எழுதப் பெற்றதாக ஓராவணக்குறிப்புப் பின்வருமாறு உள்ளது: 18-10-1862 கவர்ன்மெண்டுக்கு1888-1840இல் திருவிடைமருதூரில் தேரை இராஜாபிரதாபசிங்க்ஜீ அவர்கள் தயார் செய்ததைப்பற்றிச் சிவாஜிராஜா அவர்கள் ஆக்ஷேபனை 36. 5–297, 298 37. 3-223 38, 1-116, 117, 197 39, 4-88 40, 2-169 41. பக்கம் 82 போன்ஸ்லே வம்ச சரித்திரம் 42, 1-118, 119