பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 வாத்தியக்காரர்கள் வாத்தியங்களை மேலே தூக்கி மூன்று முறை சுற்றி வாசிக்கும் மரியாதை முதல் மரியாதை இரண்டு சுற்றுச் சுற்றி வருவது இரண்டாவது மரியாதை ஒரு சுற்றுச் சுற்றி வருவது மூன்றாவது மரியாதை, - இவற்றைத் தெரிந்து கொள்வது " பாராக்காரர்களது ' கடமையாகும். அரசரது பெயரர்களுக்கு வாத்தியக்காரர்களும் " பாராக்காரர்களும்' முதல் மரியாதை செய்யவேண்டும். ராஜேபூரீ மாப்பிள்ளைகளுக்கு இரண்டாவது அல்லது மூன்றாவது மரியாதை செய்யூலாம். சர்க்கேல் மஜூம்தாரிகளுக்கு முதல் மரியாதை. ஃபவுஜ்தார். களுக்கு முதல் மரியாதை. தஞ்சாவூர் கில்லேதாருக்கு வாத்தியக்காரர்கள் மூன்றாவது மரியாதை; பாராக்காரர்கள் முதல் மரியாதை. னங்களின் 'மத்யஸ்தர்களு"க்குப் பாராக்கள் முதல் மரியாதை, 한g த தாகளுககு (Մքի త్ மற்ற மகால் மத்யஸ்தர், பங்க்நாயிக், வஜிராத்மா மோஹிதே, போன்ஸ்லே - அரண்மனை அடையாளங்களுடன் வரின் பாராக்கள் இரண்டாவது மரியாதை. அடையாளமுள்ள சமுத்வான், பாக்வான் இவர்களுக்குப் பாராக்கள் மூன்றாவது மரியாதை. காணாமற் போன பொருள்பற்றி (அரண்மனையில்) பொருள்கள் காணாமற்போனால் அவரவர்களுடைய அஜாக்கிரதையினால் ஏற்பட்டதாகலின், அப்பொருள்களுக்கு அவர்களே பொறுப்பு: ஆகவே அவர்களுடைய சொத்திலும் வருமானத்திலும் ஈடு செய்ய வேண்டும். மேலும் மிக்க அஜாக்கிரதையால் பொருள்கள் கெட்டுப்போனால் அதன் மதிப்புக்கு ஏற்பவும் சட்டப்படிக்கும் தண்டனை கொடுத்தல் வேண்டும். உயர்பதவியில் உள்ளவர் ஆனால் அடையாளங்களைப் பறிமுதல் செய்யலாம் : 2. மஜும்தார் - நிலவரிக் கணக்கு எழுதும் பொறுப்புடையோர் . -- 3. .%uøyğ4şırf – * Fouj-army; dar-holder. Military Officer of a district. He administered criminal justice too " - Glossary - Administration & Society in the Carnatic - K. Rajayyan. 4. வஜிராத்மா - அரச குடும்பத்தைச் சேர்ந்த பெருமக்கள்.