பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368 " சந்த் 12வ ரஜப் மீ" 1193 ஹிஜ்ரி , முத்திரை போடப்பட்டது : 1779 ஜூலை மீ" 26வ அனுப்பியது. " சந்த் 13வ ரஜப்மீ" 1193 ஹிஜிரி ; முத்திரை போடப்பட்டது 1779 ஜூலை மீ 28வ சேர்ந்தது ' - என்ற குறிப்பில் ஹிஜ்ரி' ஆண்டு குறிக்கப்பட்டுள்ளது. ஹிஜ்ரி யாண்டுடன் 586 சேர்த்தால் ஆங்கில ஆண்டைப் பெறலாம் என்பது இதனால் அறியப் பெறும். - பசலி' 1238 ஜூலை முதல் 1234 அக்டோபர் வரையிலுள்ள பாக்கித் தொகையைக் கஜானாவிலிருந்து கொடுக்கும்படி உத்தரவாகவேனும் " என்ற குறிப்பில்' பசலி கொடுக்கப்பட்டுள்ளது. பசலி எண்ணுடன் 591 சேர்த்தால் ஆங்கில ஆண்டு வரும். - 1801 ஜூன் 30ஆம் நாள் முதற் கொண்டு ஆங்கிலேய தேதி " என்ற குறிப்பால்' மேற்குறித்த முறை விடப்பெற்று ஆங்கில ஆண்டு குறிக்கிற வழக்கம் வரலாயிற்று என அறியலாம். பறவைகள் முதலியன வளர்த்தல் பயிரி, லகட் என்ற பறவைகள் வேட்டையாடுதலில் வல்லவை' எனத் தெரிகிறது. 1803இல் பே சரி என்னும் பறவை வாங்க 5 புலி வராகன் கொடுக்கப் பட்டது.' 1842இல் ஐந்து வர்ணக்கிளி ரூ. 3 கொடுத்து வாங்கப்பெற்றது." ஆனால் 1834இல் ரு. 24–4–0 கொடுத்து வாங்கப்பெற்றது என்றும், தரகு ரூ. 1-4-0 என்றும், கொண்டுவந்தவனுக்கு ஓராடை அளிக்கப்பெற்றது என்றும் ஒரு குறிப்பு' உள்ளது. 1829இல் கிளிகள் 50, குருவிகள் 50, மற்றப்பறவைகள் 4 வாங்கப்பெற்றன." 141. 5-424, 425, 426 142. முகம்மது நபிகளின் மதீனா யாத்திரையினின்று கணக்கிடும் ஆண்டு முறை. 143. பசலி - கி. பி. 391 முதல் தொடங்குவதும் 1555ஆம் ஆண்டு அக்பரால் ஏற்படுக் தப்பட்டதுமான ஆண்டுமுறை - 144. 5–1 145. 2–165 146, 1–88 147. 1–55 148. 1–161 149. 1–292 150. ச. ம. மோ. த. 4-12,