பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

423 கர்சியிலுள்ள, தருமபுரம் மடத்தின் சிஷ்யரான நாயிக் பண்டாரி அவர்கள் ஹ-ஜாரிடம் செய்துகொண்ட அர்ஜி: * காசியிலுள்ள அன்னசத்திரம் நந்தவனம் தருமம் நடத்த வேண்டி பேஸ்ஜி 500 சக்கரம் கொடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் வருஷத்திற்குத் தொகை வந்து சேர்கிறதில்லை; ஆகையால் ஒரு கிராமத்தைச் சர்வமானியம் செய்துகொடுக்க வேணடும் என்று. | அதற்குப்பேஸ்ஜி தற்போது தம்முடைய பேரால் அதிகம் தருமம் நடக்க 500 சக்கரம் ஜாஸ்தியும் முன்னிருந்த 500 சக்கரமும் சேர்த்து.1000 சக்கரம் மொயினுக்குத் தாலுாகா குர்சியைச்சேர்ந்த சோன்பட் என்னும் ஊரில் நன்செய் புன்செய் நிலங்களைச் சர்வமான்யம் செய்து கொடுத்தார்.' கி. பி. 1737க்குரிய இந்தக் காலவட்டத்தில் திருப்பனந்தாள் பூநீகாசி மடத்தில் அதிபராக விளங்கியவர்கள் பூநீகாசிவாசி தில்லைநாயக சுவாமிகள் ஆவர். இவர்கள் கி. பி. 1720 முதல் 1756 வரை வாழ்ந்தவர்கள். இவர்க்குமுன் பூரீகுமரகுருபர சுவாமிகளை முதலாகக்கொண்டு 5 தலைமுறை காசியிலேயே கேதாரகட்டத்தில் பூநீகுமரசுவாமி மடத்தில் வாழ்ந்திருந்தனர். ஆறாமவர் ஆகிய பூநீகாசிவாசி தில்லைநாயக சுவாமிகள் கி. பி. 1720இல் தமிழ் நாட்டில் திருப்பனந்தாளில் இந்நாளில் விளங்கும் காசிமடத்தை நிறுவினார்.3 இவ் ஆவணத்தில் குறிக்கப்பெற்ற " நாயக் பண்டாரி" என்பவர் தில்லைநாயக சுவாமிகள் ஆவர் என்று கொள்ளலாம். முதல் ஏகோஜியின் பேரன் அதாவது துக்கோஜி எனப்பெற்ற முதலாம் துளஜாலின் மகன் இரண்டாம் ஏகோஜி. கி. பி. 1720இல் திருப்பனந்தாளில் மடம் நிறுவிய தில்லைநாயக சுவாமிகள் முதலாம் துளஜா அல்லது அவரது தமையன் முதலாம் சரபோஜியிடமிருந்து காசியில் அன்னதானம் நந்தவனம் ஆகிய அறங்களை நடத்த 500 சக்கரம் வீதம் ஆண்டுதோறும் பெற்றனர் ஆதல் வேண்டும். அத்தொகை காலாகாலத்தில் கொடுக்கப்பெறவில்லை போலும். ஆகவே ஒரு ஊரைச் சருவமானியமாகச் செய்து கொடுக்கவேண்டும் என்று இரண்டாம் ஏகோஜியிடம் கி. பி. 1787இல் கேட்டுக்கொண்டார்." ஆவணத் தொடக்கத்தில் சுஜான்பாயி சாகேப் என்று பெயர் குறிக்கப்பெற்று இருத்தலால் அவ்வரசமாதேவி அரசரிடம் பரிந்துரை செய்திருக்கக்கூடும். அரசரும் மனமுவந்து முன்னர் அளித்துவந்த தொகையோடு 500 சக்கரமும் = ■ பக்கம் XVIII. குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத்திரட்டு-பூநீகாசிமடம் பதிப்பு-ஜூன் 1952 4. மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் மாணாக்கர் முத்துசாமி பிள்.ைக. எழுதிய பனசைச் சிலேடை வெண்பா என்ற நூலில், போன்பூத்த' என்ற குருபரம் ப,ை விளக்கப்பாடலில், ' தென்பூத்த என்ற பாடலில் 'தஞ்சை மான்யம் பெர்ற தில்லை நாயக முனிவர் என்று இச்செய்தி கூறப்பட்டது சாண்க,