பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448 என்ற குறிப்பால் தியாகேசர் குறவஞ்சி என்ற நூல் பற்றி அறியப்பெறும். இதுவும் ஸாஹஜி காலத்தில் எழுதப்பெற்ற குறவஞ்சி நூலாகும். இந்நூல் பாடல் 3இல், " தங்கமா மகுடம் சூடும் சகசி ராசேந்த்ரன் ' என்றும், பாடல் 15, சரணம் 3இல், " ராஜராஜர் பணி யேகராஜ னுதவு சகஜி " என்றும், 25ஆம் பாடலில், ! " சிலைமதவேள் சகஜிராஜன் தினம் பணியும் வாசலிது ' என்றும், பாடல் 31, சரணம் 4இல், மண்டலாதிபதி சகஜி ராஜேந்திரன் வாழும் சோழ தேசம் ' என்றும் பாடியுள்ளமையின் இந்நூலாசிரியர் ஸாஹஜி காலத்தவர் என்பது உறுதி எய்தும். இந்நூல் முத்துக்கவிராயரால் இயற்றப்பட்டிருக்கலாமோ என்று டாக்டர் வ்ே. பிரேமலதா அவர்கள் கருதுவர்." പ്പ - இக்குறவஞ்சி திருவாரூரில் தியாசேப்பெருமான் திருக்கோயிலில் தேவாசிரிய மண்டபத்தில் பங்குனி உத்தரப்பெருவிழாவில் நடிக்கப்பெற்றதாகக் கூறப்படுகிறது." - இக்குறவஞ்சிக்கும் பிற குறவஞ்சிகளுக்கும் சிறிது வேறுபாடு உண்டு. பிற குறவஞ் Aகளில் காணப்படும் காப்பு, தோடயம், மங்களம் ஆகிய உருப்படி களுக்குப் பிறகு கட்டியங்காரன் மேடையில் தோன்றித் தலைவன் பவனி வருவதை அறிவிப்பது இக்குறவஞ்சியில் காணப்படவில்லை. இக்குறவஞ்சி யின் கதாநாயகியான ராஜமோகினி தியாகேசரைப் பார்த்ததை எங்கும் குறிப் பிடவில்லை. பிற குறவஞ்சிகளில் இருத்தல்போலக் குறவன் குறத்தியைத் தேடிவருதல் பற்றியவை மிகச் சுருக்கமாக இந்நூலில் உள்ளன. இக்குறவஞ் சியில் நாரதரே குறத்தியாக வந்தார் என்றும், தும்புரு சிங்கனாக வேடம் புனைந்து வந்தார் என்றும் உள்ளது. பிறவற்றுள் காணப்படாத அண்ட கோளதருவு இதில் உண்டு." " வீணே காலம் போம் வார்த்தைகள் நிற்கும்; " காக்கும் வேலியே பயிர் அழித்தால் விளையும் வாறெப்படி: எளியாரை வலியார் வாட்டினால் வலியாரைத் தெய்வம் கேளாதோ' (10ஆம் பாடல், பக்கம் 15 ) 18. ս*. 32, தியாகேசர் குறவஞ்சி, டாக்டர் பிரேமலதா 19. பக்கம் 83-84 டாக்டர் பிரேமலதா 20. பக்கம் 81-82 டாக்டர் பிரேமலதா