பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

462 கிராம முன்சிபு நியமனம் இந்த ஊர்களுக்குக் கிராம முன்சிபுகள் நியமிக்கப்பெற்றனர். 19-1-1827ஆம் தேதியிட்ட கடிதத்தில் கலெக்டர் " அவர்களுக்கு பாபாஜி (சர்க்கேல்) எழுதிய கடிதத்தில் ஸர்க்கார் இலாகாவில் கிராம முன்சிப் நியமிக்கிற விஷயம்" பற்றிக் கூறப்பட்டுள்ளது. கி. பி. 1826 ஏப்பிரல் திங்களிலேயே தம் மேற்பார்வையில் உள்ள ஊர்களுக்கு அரசரே கிராம முன்சிப்பு களை நியமித்துவிட்டதாக அக்கடிதத்தில் உள்ளது. தம்மால் நியமிக்கப்பட்ட அவ்வலுவலர்களை நீக்கும் அதிகாரம் مrrبعهتا மன்னருக்கு உண்டு என்பது, "1742 : வைதளம்பூர் முல்லைவாசல் மிராசுதார்கள் கண்டு முதலான நெல்லைக் களத்தில் போட்டு அளந்துதரவேண்டிய பாக்கியைக் கொடுக்காமல் கொண்டு போனதைத் தடுப்பதற்காக, மணியகாரரை விலக்கி, ஹர்கார் 2. காவல்காரர் 4 நியமித்திருக்கிறது." என்ற எழுத்துச்சான்றினால் உறுதியெய்தும். மேலும் இதனால், அதிகாரிகள் அரசாங்கத்துக்குச் சேரவேண்டிய நெல்லை வசூலிப்பர் என்றும், அங்ங்ணம் வசூலிக்கத் தவறினால் அவ்வலுவலர்கள் நீக்கப்பெறுவர் என்றும் அறியப் பெறும். இதனால் கிராம அதிகாரிகள் கும்பினியார் பார்வையில் இருந்த கிராமங் களுக்கும் நியமிக்கப்பெற்றனர் என்பது தெளிவு. கிராம முன்சீபுகளை நியமிப்பதற்குச் சென்னைக் கோட்டை ஆலோ சனைச் சபையில் கவர்னர் பிறப்பித்த சட்டம் ஒன்று உண்டு." அச்சட்டத்தின் படி ஊர்களில் உள்ள பெரியதனக்காரர்கள் கிராம முன்சீபு ஆக நியமிக்கப் பெற்றார்கள். இவர்களுக்கு உதவியாகக் கிராமக் கணக்கரும் இருந்தனர். 4 1818 : கம்பெனி ஊர்களுக்குத் தலையாரி நியமன விவரம் கும்பகோணம் தாலுகா மொத்த ஊர்கள் 699' என்ற எழுத்துக்குறிப்பு ஒவ்வொரு ஊருக்கும் தலையாரி' என்ற அலுவலனை நியமித்தல் பற்றிக்கூறுகிறது. இந்தத் தலையாரிகள் அல்லது காவல்காரர்கள் காவல் (போலீஸ் வேலையைச் செய்தனர்."அ 4. ச. ம மோ. க. 5-18 5. கிராம முன்சிபுகள்ைக் குறித்த 1816ஆம் ஆண்டு 4ஆவது சட்டம், தமிழாக்கம், தமிழ்ட பல்கலைக் கழக நூல்நிலையத்தில் உள்ளது 6, ச. ம. மோ. க. 28.கச் 6.a. “The Kavalkars or Talaiyaris performed Police duties” - p. 93, Adminis tration and Society in the Carnatic” - K. Rajayyan,