பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/473

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

464 ஒரிரு வீடுகளே; அவர்களுக்கும் ஊரிலுள்ளவர்களுக்கும் வழக்கு வந்தால் உடனுக்குடன் விசாரணைசெய்ய முடியாது. காலதாமதம் ஆகும். கலெக்ட ரிடமே வழக்குத் தெரிவிக்க வேண்டும்"- இப்படி ஒரு இக்கட்டான நிலையும் உண்டு. வசூல் குறைவு பயிரிடுபவர்கள் தாம் கொடுக்கவேண்டிய மகசூலைத் தகுந்த காலத்தில் கொடுக்காமல் பாக்கி வைத்துக் கொள்வர். சின்னாட்களுக்குப் பின், "பாக்கி யைக் கொடுக்கவேண்டியதில்லை; சர்க்கார் தள்ளிக்கொடுக்கவேண்டும்" என்று வீண் வழக்காடுவர்; தழ் கட்சிக்கு நியாயம் இருக்குமாறு தோன்றச்செய்து சர்க்காருக்கு நஷ்டத்தை உண்டாக்குவர். சர்க்கார் அந்நியாயம் செய்வதாகக் கூறுவர்." 1779; ரயத்துக்கள் நல்ல நடவடிக்கையுடன் தொகையைக் கொடுப் பதில்லை; கண்டித்தால் பார்ப்பவர்க்கு அநியாயம் செய்வதாகத் தோன்றும் ' என்று ஓராவணத்தில் உள்ளது." இவற்றான் பயிரிடுபவர் நேர்மை தவறத் தொடங்கினர் என்பது தெரியவருகிறது. நில அளவு ' கண்டிதம்பட்டு என்ற ஊரில் வசிக்கும் வெங்கடாசல வன்னியர்...... மேற்சொன்ன ஊர், செளம்ய சம்வத்சரம் அளவு எடுக்கப்பட்ட கணக்கரின் நகல்-சூர் மஹால் தப்தரிலிருந்து எழுதி வாங்கிக் கொள்வது F என்ற எழுத்துச் சான்றினால்" அந்நாட்களில் ஊர்கள் அளக்கப் பட்டன என்றும், அளவு எடுக்கப்பட்ட கணக்கு அரண்மனையில் சூர் மகாலில் பாது காக்கப்பட்டிருந்தது என்றும் தெரிகிறது. நிலம் தரம் போடுதல் (பைமாவிடி) வெள்ளையர் நிலவரி வசூல் உரிமை பெற்றதும் தஞ்சையில் நிலங்களின் தரம் பார்த்து வரி விதிக்க முயன்றனர். ஆகவே, "நிலத்தின் ஸ்வரூபத்தை அறிந்து அதற்குத் தரம் நிர்ணயம் செய்வதற்கு அனுபோகமுள்ள இரண்டு மிராசுதார்களைத் தன்னிடம் அனுப்பவேண்டும் " என்று பிரின்ஸிபல் கலெக்டர் ' கேட்டுக்கொண்டார். ஆனால் 7-6-1827இல் கொடுத்த மறு 15. மொழியில் மிராசுதார்கள் சரியாகத் தரம் போடமாட்டார்கள் என்று கருத்துத் தெரிவிக்கப்பட்டது. 10. 1-88, 89 11. 7-624, 625 12. 5–408 13, 11–41 14. 8–50 15. 3-51