பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 சிவாஜியின் கடிதத்திலேயே தந்தை ஜாகீர்கள் முதலியவற்றில் அரைப் பங்கு கேட்டதாகக் கூறியிருக்கக் கர்நாடகத்தில் மராத்தியர் ஆட்சி என்ற நூலில் சிவாஜி முக்கால் பங்கு கேட்டார் என்று கூறியிருப்பதற்குரிய ஆதாரம் " வெளிநாட்டார் குறிப்புக்களே " ஆகும்." - --- வெங்காஜி திரும்பிய பிறகு, கொள்ளிடக் கரைக்கு வடக்கிலுள்ள நாடுகளைத் தன்வசப்படுத்திச் சாந்தாஜி என்பவரை ஆட்சிபுரியுமாறு நியமித்து, ரகுநாத் நாராயணை அமைச்சராக்கி, அம்பீர்ராவ் என்பவரைப் படைத்தலைவ ராக்கிச் சிவாஜி வடபுலம் நோக்கிச் சென்று பன்ஹாலாவை அடைந்தார். இதற்குள்ளிாக, வெங்காஜி மதுரை மைசூர் அரசர்களது உதவியை நாடினார். அன்னோர் உதவவில்லை. இதனையறிந்த சாந்தாஜி கொள்ளிடத் தைக் கடந்து வந்தார். 26-11-1677இல் பெரும்போர் நடந்தது. ஏகோஜி வென்றார். ஆயினும் அன்றிரவே சாந்தாஜி, வெங்காஜியின் படையைச் சின்ன பின்னமாக்கினார். - - - --- இச் செய்திகளையறிந்ததும் சிவாஜி பெரிய கடிதத்தை (கடிதம் | ) எழுதினார். ---- அதில், சிவாஜி அதுகாறும் நிகழ்ந்துவந்த செய்திகளையெல்லாம் சுருக்கமாக எடுத்துரைத்தார். வெங்காஜியின் நாடுகளையெல்லாம் தான் வென்றிருப்பதாகவும், முகமதியர்களின் பேச்சைக் கேட்டதனால் வெங்காஜிக்கு இழப்பு ஏற்பட்டது என்றும், தாம் இருவரும் மனமொத்து வாழ்வதே சிறப் புடையது என்றும், தம் தந்தையின் ஜாகீர்கள் முழுவதும் தனக்குக் கொடுத்தால் பனஹலாவில் வெங்காஜிக்கு நாடு கொடுக்கப்படும் அல்லது குதுப் சாகேப் இடம் இருந்து 3 லக்ஷம் வராகன் வருவாய் தரக்கூடும் நிலம் வாங்கித் தரப்படும் என்றும், இந்தக் கடிதம் க்ண்டதும் ரகுநாத் நாராயண் இடம் தொடர்பு கொள்க என்றும் சிவாஜி எழுதியிருந்தார். - வெங்காஜி மிகவும் வேண்டிக்கொண்ட பின்னரே ரகுநாத் நாராயண் ஹனுமந்தே வந்தார். அவர் சொற்படி சிவாஜி கேட்டவற்றைக் கொடுத்தார். ரகுநாத் நாராயணைத் தனது அமைச்சராகவும் வெங்காஜி ஏற்றுக்கொண்டார். பின்னர் வெங்காஜி அமைதியுடன் ஆட்சிபுரியலானார். கி. பி. 1680இல், தஞ்சையும் தான் வென்ற பிற நாடுகளும் சிவாஜிக்கே உரியன என்று பீஜபூர் சுல்தான் சிவாஜிக்கு "ஸன்னது" செய்துகொடுத்தார். இது வெங்காஜிக்குக் கலக்கத்தை விளைவித்தது. இதனால் தன் சுயேச்சை பறிக்கப்பட்டது என்று வெங்காஜி நினைத்தார்; வாழ்க்கையில் வெறுப்புற்றார்; 5. Maratha Rule in the Carnatic - Srinivasan, C. K. - Page 160, foot - note 3. (Annamalai University, 1944) ... -- 6. இக் கட்டுரையின் இறுதியில் கண்ட அடிக் குறிப்பைக் காண்க