பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 காவல்காரர்கள் ரொம்பநாளாக மிராசு அவர்களை எடுப்பதற்கு ரயத்துத் களாலும் சர்க்காராலும் முடியாது. அவரவர்களுடைய பந்து ஜனங்கள் சர்க்காருக்குக் கட்டுப்பட்டு நடக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் 20, 30 கிராமங்கள் ஒரு பங்கு உள்ளவர்கள் " என்று கூறுவதால் அவர்தம் செல்வாக்கும், செல்வச் செழிப்பும் அறியப்பெறும். இத்தகைய காவல்முறை 1814இல் ஒழிக்கப்பெற்றது." வக்கீல் என்பது ஒரு அலுவல்; எல்லா அரசர் காலங்களிலும் இருந்தது. இவை போன்று வேறு பல அலுவல்கள் பெரியனவும் சிறியனவும் இருந்தனவாதல் வேண்டும். காவிலி : 1798: அணக்குடி வட்டம் கமாவிஸ் சாமிநாதபிள்ளை" கட்டளை 2 ஊர்கள் 46 '

    • 1798 திரிலோகி வட்டம் கமாவிலி காசி செடயப்ப பண்டாரம் சுபா

கும்பகோணம் 31יי "1798 ஐவேலி வட்டம் கமாவிலி சுப்ரமணிய ஒடையார்" 1798 கிழக்காட்டுர் வட்டம் கமாவிலி செடயப்பிள்ளை மொத்த ஊர்கள் 3' "1798 : திருப்பனந்தாள் கமாவிஸி வைத்திலிங்கம் பிள்ளை ' என்ற எழுத்துக்களால் கமாவிஸி என்பது பல ஊர்களை மேற்பார்வை செய்யும் அதிகாரியைக் குறிக்கும் என்று ஊகித்தறியலாம்.

மேலே விவரிக்கப்பட்ட அலுவலர்களில் திகழ்ந்த உயர் அலுவலர்களைப் பற்றிய செய்திகளுட் சில தெரியவருகின்றன. டபீர் பண்டிதர் : இவர் பிரதாபசிங்கர் காலத்தில் திகழ்ந்த சிறந்த அமைச்சர். இவர் முதலில் " அமானி ' முறையைக் கையாண்டார். கி. பி. 1771இல் தஞ்சை நவாபின் ஆட்சியில் அடங்கியபொழுதும் இவ் அமானி முறை பெரிதும் கையாளப்பெற்றது. ' அமானி ' முறையின்படி அறுவடைக் காலத்தில் அரசு அலுவலர்கள் நேரில் வந்து கண்டுமுதல் செய்து அரசுக்குரிய பங்கை வசூல் செய்துகொள்வர். டபீர் பண்டிதர் ஒரு புதுமுறையை உண்டாக் கினார். 10 ஆண்டுகளின் வருமானத்தை அறிந்து அதன் சராசரியை நிலத்தைப் பயிரிடுபவர் தரவேண்டும் என்று ஆணையிட்டார். இது_டபீர்முறி" 29. P. 358-59, Maratha Rule in the Carnatic - Srinivasan, C. K. 30. 33-13 31. 33–14 32. 33–15 33. 33–20 34, 38–22 35. Pages 651-652, Tamjcre Dt. Manual