பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

தஞ்சை மராட்டிய



சமாதானம் பண்ணுகிறது, இப்படிக்கு பண்ணிக்கொண் டிருந்தார்கள்." அதுக்கு மஹா றாஜா இடங்கொடாமல் ரெண்டு ரெண்டரை மாதம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். யிதுக்குள்ளே நாதராசிங்கு' வெகு சேனை களுடனே அயிதுறாபாத்திலே யிருந்து பிறப்பட்டு ஆற்க்காட்டுக்கு வந்தான்." அவாள் சேனைகள் முன்னே வந்துது. ஆற்க்காட்டிலே சந்தாசாயபுடைய மனுஷன் சற்தார் செஷாறாயனை இவாள் கொண்ணுபோட்டார்க ளென்கிற சேதி சந்தா சாயபுக்கு தெரிந்தவுடனே சந்தாசாயபு முதலான பேர்கள் கோட்டையை சுத்திக் கொண்டிருந்தவாள் இறாசத் மோதின்கானுடனே கூட எல்லோரும் சிறுது சாமான்களைக் கூடப் போட்டுவிட்டு புதுச்சேரிக்கு பிறப்பட்டு போய்விட்டார்கள். நவாபு மமுதலிகான் திருச்சினாப்பள்ளியிலே யிருந்து பிறப்பட்டு நாதறாசிங்குத்கு முன்னுதாக ஆற்க்காட்டுக்குப் போய் சேர்ந்தார். அப்போ தஞ்சாவூர்க்கு கும்மக்கு அனுப்பிவிக்க வேண்டுமென்று சொல்லி அனுப்பிவித்தார்கள். அப்போ பிறதாபசிம்ம மஹா ஹாஜா தம்முடைய சேனாபதி மானாஜி றாவுக்கு சேனைகளுங் குடுத்து நாதர் சிங்கு பாளையத்துக்கு கும்மக்கு அனுப்பிவைத்தார். அவர் போய் கொஞ்ச நாளிருந்து மறுபடியும் வந்து சேர்ந்தார்கள். அதுக்கு பிற்பாடு நாதர்சிங்கு தெய்வகதியான வற்த மானமும் வந்து சேர்ந்துது."

உடனே சந்தாசாயபு என்கிறவன் நாதர்சிங்கு செண்ணுபோனவுடனே மறுபடியும் பிறப்பட்டு திருச்சினாப்பள்ளிக்கு உயித்தத்துக்கு வந்து பிறாஞ்சுக் காறர் கும்மக்கும் வாங்கிக் கொண்டு பூரீறங்கத்திலே வந்து யிறங்கினான்.

==

146. “At Tanjore their doings were not fruitful; the Rajah procrastinated"(The Maratha Supremacy, Page 321)

147. நாதறாசிங்கு - நாஸர் ஜங்

148. “Suddenly news reached that Nazir Jung was fairly well on his march into the Karnatak with a huge army”- (Maratha Supremacy, Page 321)

149. “With very great difficulty, the French troops, Muzaffar Jung and Chanda Sahib reached Pondicherry”- (Srinivasan, Page 260)

1 50. “Nazir Jung ...... without trying the hazard of a battle, agreed to signa treaty dictated by Dupleix. While carrying on the negotiations, Dupleix had been playing a double game and had entered into a plot with three powerful pathan nobles in Nazir Jung's army whom he found willing to betray their chief...... His arrangements with these traitors having been matured, Dupleix ordered up a detachment from Gingee to attack the unsuspecting prince........ The prince came upon the contingent of the Nabob of Cuddapah one of the leaders in the treason. Nazir Jung rode up to him and told him that he was a dastardly, coward who dared not to defend the Mughal's standard. The traitor replied that he knew no enemy but Nazir Jung and at the same time gave the signal to the fusilier who rode by him on the same elephant, to fire. The shot missed, on which Cuddapah himself discharged a carbine, which lodged two bullets in the heart of the unfortunate Nazir Jung who fell dead upon the plain"- (District Manual, N.A., Page 56-57)