பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

தஞ்சை மராட்டிய


அப்படியே மேஸ்தர் டூரியன் சாயபுறிசெடெண்டில் மேஸ்த்தர் மக்கள வுட்டு[1] சாயபு விவகாரத்தைத் தொட்டு"[2] மஹா ருஜா நிசமாய் எழுதின அற்புதங்களும் மஹா ருஜாவுடைய நிசத்துவத்தையும் சாட்சி பலங்களையும் கும் புனியாருக்கு வெயக்த்தமாய் தெரியப் பண்ணின உபகாரத்தை அல்லாமலும் தாம் சீர்மைக்குப் போன பிற்பாடும் மஹா றாஜாவினிடத்தில் பிறிதியாய் மகா றாஜாவுக்கு சில பொஸ்த்தகங்களும்'[3] பூகோளத்தின் படமும்" வெள்ளிப்பாத் திரங்களான சில சாமான்களும் அனுப்பிவித்தார். அதினாலேயும் மஹா றாஜா மேஸ்த்தர் டுரியன் சாயபுடைய உபகாரத்தை றொம்பவும் எண்ணுகிறார்."[4]

இந்தப் பழனிசாரி[5] , போரைத்துக்குமுன் முதல்பொண்ணு பிறந்த சவு பாக்கியவதி அகல்லியா பாயி சாயபு கெற்பத்தில் ரெண்டாம் பொண்ணு பிறந்துது. அந்த குழந்தைக்கு றாஜகுமார பாயி சாயபு என்று பேர் வைத்தார்கள்.

மஹா ஹாஜாவுடைய ருச்சியபாரத்தில் பாஜ் என்கிற குருவி[6] " இந்த் தேசத்துக்கு எண்ணைக்கும்"[7] வராத அபரூபமான குருவி வந்திருந்தது."[8]


  1. 43. மக்களவுட்டு - மக்லோடு
  2. 4 4. அடிக்குறிப்பு 9, 10, 11 அவற்றுக்குரிய மூலமும் பார்க்க -
  3. 45. 18-7-1821இலும் டுரியன் சீமையிலிருந்து சில புத்தகங்களை அனுப்பினார் என்று தெரிகிறது (5-36). இது பிற்காலத்தில் நிகழ்ந்தது.
  4. 46. பல பழைய பூகோளப்படங்கள் தஞ்சை சரசுவதி மகாலில் உள்ளன. இதற்குப் பிறகு போ . வ. ச. வில். 'புத்தகம் கட்டுவதற்காக ஜரிகை வேலை செய்த துணிகளையும்' என்பது அதிகமாக வுளது.
  5. 47. றொம்பவும் எண்ணுகிறார் - எப்போதும் மெச்சுகிறார் (போ, வ. ச. பக். 138)
  6. 48. சாரி - சவாரி (டி 3762); தீர்த்தயாத்திரை (போ. வ. ச. பக். 13.8)
  7. 49. குருவி - பக்தி (போ. வ. ச. பக். 138)“The common name given to a class of “Shikar” hunting hawks is Gulab Chesma. As many as six pairs of distinctive variety are explained. The 'term used to denote the female bird is ‘Baj', which is generally bigger in size while the term used to denote male bird is "Jura' which is smaller in size than the female variety ......... The birds are reputed to live up to a period of twenty years and the first five years are considered to be the , best period for utilising them for hunting purposes except the variety of ‘Basheen' which though it becomes old it is yet capable of hunting. The bird should be procured when they are young ones & trained to hunt”- (Gaja Sastra - Sara with Pakshi Lakshana & Chikitsai (Baja Namah) - Ed. by A. Krishnaswami Mahadick Rao Saheb B.A., T.M.S.S. Library, Thanjavur - 1951 - Introduction)
  8. 50. எண்னைக்கும் - எண்ணும் (டி3762), என்றும், எப்பொழுதும். *- இந்த இடத்தில் போ. வ. ச. வில் (பக்கம் 138) பின்வரும் செய்தியுள்ள்து: "மகா ராஜாவின் தர்மபத்தினியான செளபாக்கியவதி அகல்யாபாயி சாகேயாவின் வயிற்றில் முன் கூறப்பட்ட இரண்டு கன்னிகைகள் பிறந்த பிறகு அந்த அம்மாளிடத்திலேயே மகாராஜாவுக்கு