பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166

தஞ்சை மராட்டிய


ஊறுவிளைவிக்க நினைத்தார். விட்டோபா மறைந்தருளினார். பிறகு துளஜா புரத்துக்குச் சென்று துளஜாப்வானிக்கு ஊறு செய்தார். அந்த மூர்த்தியும் மறைந்தார். பின்னர்ச் செம்பு மகாதேவருக்கு ஊறு விளைவித்தார். உடன் வந்த சர்தார்களே மறித்தார்கள். பின்னர்ப் பல்லிவனத்துக்குச் செல்ல, அங்கே கண்டேராவ் மறைந்தருளினார்.

பிறகு சிவாஜியிடம் கிருஷ்ணாஜி பண்டிதரை அஃப்சல்கான் தூதுது அனுப்பினார். அஃப்சல்கான் சொல்லியவண்ணம் கிருஷ்ணாஜி பண்டிதர், சிமாகெடி, பீமநதி, புரந்தர கெடி ஆகியவற்றை விட்டுவிட வேண்டுமென்றும் பேட்டியான பிற்பாடு மற்றவை தெரிய வரும் என்றும் சிவாஜியிடம் கூறினார். சிவாஜி மகிழ்ந்து ஜாவாலியில் காண்பதற்கு இசைவு அளித்தார்.

இதற்கிடையில், அஃப்சல்கான் பல சீர்மைகளை வெற்றி கொண்டு வருங்கால், சம்பாஜி அஃப்சல்கானை எதிர்த்தார் என்றும், அஃப்சல்கான் சம்பாஜியைக் கொன்றார் என்றும், இச்செய்தியை அறிந்த ஷாஜி வருத்தத்தினால் இரண்டு திங்கட்குப் பின் இறந்தார் என்றும் சிவாஜி அறிந்தார். (சம்பாஜி யிறந்தது சகம் 1580; கி.பி. 1658.) ஷாஜியின் இறுதிச் சடங்குகளை ஏகோஜி நடத்தினார். ஜிஜாபாய் சிவாஜியைக் காண வந்தார். அவரைப் பிரதாப கெடியில் இருக்கச்செய்து சிவாஜி சினத்துடன் இருக்குங்கால் அஃப்சல்கானின் வருகையை அறிந்தார்.

சிவாஜி அஃப்சல்கான் இருக்கும் இடத்துக்கு வந்தார். அஃப்சல்கான் சிவாஜியைக் கட்டிப்பிடித்துக் கொண்டு மடியிலிருந்த கட்டாரியை யுருவிச் சிவாஜியின் வயிற்றிலே குத்தினார். சிவாஜி மெல்லிய இரும்புக் கவசம் அணிந்திருந்தமையின் அஃப்சல்கான் முயற்சி வீணாயிற்று. சிவாஜி தன் பிச்சுவாவினால் அஃப்சல்கானை அடித்து, இடது கையிலேயிருந்த புலிநகத்தாலே வயிற்றைக் கிழித்தார். அஃப்சல்கான் குடலை உள்ளே தள்ளிப் போர்வையினாலே கட்டிக் கொண்டு பட்டர்க் கத்தியாலே சண்டை செய்தார். சிவாஜியும் பட்டாக் கத்தியால் அஃப்சல்கானை வீழ்த்தினார். இது சகம் 1581இல் (கி.பி. 1659) நிகழ்ந்ததாகும்.

உடனே வக்கில் கிருஷ்ணாஜி பண்டிதர் கத்தியை எடுத்துக் கொண்டு போர் செயத் தொடங்கினார். சிவாஜி அவருடன் போர் செய்யாமல் விலகிச் சென்றார். மெய்க்காவலாளன் ஒருவன் கிருஷ்ணாஜி பண்டிதரை வெட்டிப் போட்டான்.

முன்னர்க் கூறியிருந்த வண்ணம் நகரா அடிக்கப்பட்டது. அஃப்சல்கானுடைய சைனியங்களெல்லாம் கொல்லப்பட்டன. அகப்பட்ட சர்தார்கள் மரியாதையோடு அனுப்பப்பட்டார்கள். அல்லியேதில்ஷா அஃப்சல்கானின் அழிவைக் கேள்விப்பட்டு மனம் நொந்தார்.

6 சிவாஜி ஜாவளி கெடிக்குப் போகுங்கால் நேதாஜி என்பவரைப்_புனா தேயத்தில் இருக்கச் செய்தார். அஃப்சல்கான் இறந்ததும் அல்லியேதில்