பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மன்னர் வரலாறு

167


ஷா சேனைகளைக் கூட்டுகிறார் என்பதை நேதாஜி கேள்விப்பட்டுச் சிவாஜியைக் காணவந்தார்.

சிவாஜி நேதாஜியுடன் அல்லியேதில் ஷாவின் கோட்டைகள் பலவற்றை வென்றார். அப்பொழுது ஹிலால்கான் என்பவர் சிவாஜி பக்கம் சேர்ந்தார். தான் வென்ற இடங்களில் சேனைகளை வைத்துப் "பனால்கட்" கோட்டையைக் கைப்பற்றிச் சிவாஜி அங்கேயே தங்கியிருந்தார். சிவாஜி பனால் கொடியைத் தாக்கக் கூடும் என்று நினைத்த அல்லியேதில்ஷா, ருஸ்தும்கான் என்பவரை அனுப்பினார். ருஸ்தும்கான், பனாலகெடியைச் சிவாஜி பிடித்துக் கொண்ட செய்தியை அல்லியேதில்ஷாவுக்குத் தெரிவித்தார்.

இவற்றை அல்லியேதில்ஷா அவுரங்கசீபுக்குத் தெரியப்படுத்தினார். அவரங்கசீபு சுலுபுகான் (ஜூல்ப்கார்கான்) என்பவரைப் பெரும்படையுடன் அனுப்பினார். இச்சர்தாரும் மேற்கூறப்பட்ட ருஸ்தும்கானும் பனால கொடி நோக்கி வந்தனர். சிவாஜி இடைமறித்து அவர்களைத் தோற்றோடுமாறு செய்தார். மீண்டும் சுலுபுகான் பிற சர்தார்களுடன் வந்து தோற்றோடினார். இங்ங்னம் 16 தடவை சுலுபுகான் படைகள் தோற்றழிந்தன.

இதனை அறிந்த அவுரங்கசீபு சிவாஜி இருக்கும் இடத்தை அறிய விழைந்தார். சிவாஜி ஜெயவலி முதலாகிய இடங்களை வென்றார் என்றும், அவருடைய சேனைத்தலைவன் நேதாஜி, பாதுஷாவின் சீர்மைகள் பலவற்றை வென்று கொண்டிருப்பதாகவும் கூறினர். அப்பொழுது அவுரங்க சீபு தன்னுடைய மாமனார் ஷயிஸ்டகான் என்பவரைப் பல சர்தார்களுடன் சென்று சிவாஜி வென்ற நாடுகளை மீட்டுக்கொண்டு சிவாஜியைக் கண்டித்து வருமாறு ஏவினார். ஷயிஸ்டகானும் சக்கிராபதிப் பகுதியை நோக்கிச் சென்றார். இதைச் சிவாஜியறிந்தால், ஷயிஸ்டகானை வழி மறிப்பார் என்று கருதிய அல்லி யேதில்ஷா பனாலகெடியைவிட்டுச் சிவாஜி வெளியே புறப்படாதவாறு செய்ய வேண்டுமென்று நினைத்துக் கர்நூலிலிருந்த ஜோஹர்கான் என்பவரைச் சிவா ஜியை எதிர்த்துப் படை செலுத்துமாறு ஏவினார். அவரும் அங்ஙனமே சென்று பனாலகெடியை ஐந்துமாதம் முற்றுகையிட்டார்.

ஷயிஸ்டகான், சக்கிராபதி துருக்கத்தை முற்றுகையிட்டார். சிவாஜி இதனையும் பொருட்படுத்தவில்லை.

சிவாஜி, பனால கெடியில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்ற செய்தி ஜிஜாபாயி அறிந்தார்; சங்கிராம சக்ராபதிக்கோட்டையை ஷயிஸ்ட கான் முற்றுகையிட்டிருக்கிறார் என்பதையும் அறிந்தார்; பனாலாவுக்குச் சென்று சிவாஜியை விடுவிக்க வேண்டும் என்று நினைத்தார். அப்பொழுது நேதாஜி என்ற சேனைத்தலைவர் ஷிலால்கான் என்பவருடன் வந்து ஜிஜாபாயியை வணங்கினார்; பின்னர் ஜிஜாயியின் ஆணையின்பேரிலே பனாலாவுக்குச் சென்றனர். ஷயிஸ்டகான் இவர்களை இடைமறிக்கச் சேனையை அனுப்பினார். கடும்போரில் ஷிலால்கானின் மகன் இறந்தார். இவற்றைச் சிவாஜி கேள்வி