பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188

தஞ்சை மராட்டிய


(ஆ) ஷாஜிராஜாவின் இரண்டாவது மனைவியின் தந்தையான யாதவராஜாவும்.[1]

(இ) ஷாஜி ராஜா விஜயதுர்க்கம் என்ற பீஜாபூரில் இருந்த சமயத்தில் அவரது இரண்டாவது மனைவியான ஜிஜாவுக்குச் சாலிவாகன சகம் 1547 அ௸ய வருஷத்தில் முதல் புத்திரனாகச் சம்பாஜி ராஜா பிறந்தார்.[2]

(ஈ) ஷாஜி ராஜாவின் இரண்டாவது மனைவி சீசாயிபாயி[3] பூரண கருப்பமுற்றிருந்தாள்.[4]

(உ) ஷாஜி ராஜரது மூத்த மனைவிக்குப் பிறந்த மகனாகிய ஏகோஜி ராஜா வானவர் வயதில் சிறியவராக இருந்தபோதிலும் பாத்தியத்தில் அதிக முள்ளவர்; இக்காரணத்தினால் யுவராஜா பதவியும் பெங்களுர்ப்பட்டமும் 1562 விஷ வருஷத்தில் ஏகோஜி ராஜாவுக்குக் கொடுத்தும் தன் விருதுகள் எல்லாவற்றையும் ஏகோஜி ராஜாவுக்குக் கொடுத்துத் தன் குலதெய்வத்தையும் பூஜை செய்யுமாறு கொடுத்தார்.[5]

(ஊ) சிவாஜி ராஜாவின் மூத்த மாற்றாந்தாய் மாதுபூர் துகாயி ஆவு சாயேபிற்குப் பிறந்தவராகிய ஏகோஜி மகாராஜா அவர்களுக்கு ஷாஜி ராஜா வின் மூத்த மனைவியின் சந்ததியாதலால்[6]

(எ) சாத்தாராவிலே சாசிராசா யிருக்கும்போது அவருடைய முதல் பெண்சாதி துக்காபாயி கர்ப்பத்திலே புத்திர சந்தானமாச்சுது.[7]

இதுகாறும் காட்டிய மேற்கோள்களால் ஜிஜாபாயி ஷாஜியின் இரண்டா வது மனைவியென்று வற்புறுத்துக்கூறுதலே கல்வெட்டு - சுவடிகள் ஆகியவற்றின் நோக்கம் என்பது தெள்ளிதின் புலனாம்.[8]

ஜிஜாபாயியை ஷாஜி மணந்த வரலாறு பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:


  1. 20. போ. வ. ச. பக். 9 ( இந்நூல் பக்கம் 12)
  2. 21. போ. வ. ச. பக். 15 ( " " 20)
  3. 22. டி 3119 பக். 24 ( 22)
  4. 23. போ. வ. ச. பக். 17 ( 22)
  5. 24. போ. வ. ச. பக். 22 ( " " 33)
  6. 25. போ. வ. ச. பக். 62 ( 72)
  7. 26. டி. 3119 பக்கம் 28 ( 26)
  8. 26.அ. திருமுடி சேதுராமன் சுவடி (பக்கம் 200இல் ஷாஜி இரண்டு திருமணம் செய்து கொண்டார் என்றிருப்பினும், பக்கம் 40-இல் 'சாஹாஜி ராஜாவுட ரெண்டாவது பட்ட ஶ்ரீ ஜிஜீவுபாயி சாயேபு' என்றும், பக்கம் 49-இல் "அவருட ஜேஷ ஶ்ரீயான துக்காவு பாயி' என்றும், பக்கம் 86 இல் ஜேஷ்ட பட்ட ஶ்ரீயாகிய துர்க்காவுபாயி சாயபு' என்றும், பக்கம் 218இல், 'சிவாஜி ஹாஜாவானவர் தன் தம்பியான யேக்கோஜி றாஜா தம்முட. மாதாவுட குமாறனானதினாலே" என்றும் கூறியுள்ளமையின், துக்காவுங்யாயி முதல் மனைவி, ஜிஜாயி இரண்டாவது மனைவி என்பது தென்னாட்டவர் கருத்து என்பது போதகும்.