பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. திருமந்திரப் பொருள்நிலை இந்த உலகத்தைப் பொறுத்தமட் டில்பல்வேறுசிறப்புக் கிடையே ஒரு தனிச் சிறப்யும் உண்டு. அதாவது எந்த ஒரு குறிப்பிட்ட பொருளை நாம் நாடிச் செல்கிறோமோ அது நாம் நாடிச் செல்லும் இடத்தில், செல்லும் நேரத். தில் கிடைக்கும் என்று உறுதிகூற முடியாது. கடைகளில் உறுதியாக இருக்கும் என்று நம்பிச் சென்று கேட்கை யிலும் கேட்பது தவிரப் பிற பொருள்கள் இருப்பதைக் காட்டுகின்றனர். திருமுறைகளைப் பற்றிப் பேசியவர் களும் இனி வரப்போகின்ற பேச்சாளர்களும் பலருளர். அவர்கள் திருமந்திரத்தை நன்கு பயின்றவர்கள். என்னைப் பொறுத்தவரை இந்நூல்,மந்திரமாகவே (மறை மொழியாகவே) உள்ளது. திருமந்திரத்தை ஒரிரு முறைகள் படிக்க முயன்றுள்ளேன். அதற்கெழுதப் ப்ெற்ற உரைகளையும் பார்க்க முயன்றேன். என் னுடைய சிற்றறிவுக்கு அவை எட்டவில்லை. அதனால் நான் பெரிதும் வருந்தினதில்லை. உதாரண்மாக உயர் 14-2-71 அன்று திருவிடைமருதூர் திருமறை மாநாட்டில் பேசியது. - -