பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 0 அ. ச. ஞானசம்பந்தன் சமயமும் சடங்குகளும் : பிற நாட்டாரையும், பிற சமயததாரையும் எடுத்துப் பார்த்தால் ஒர் உண்மை விளங்கும். கால, தேச வர்த்த மானங்களைக் கடந்து அவர்கள் தம் நாகரிகம் அறியாத பிற மக்களிடத்தில் சென்று அவர்களோடு தங்கி, அவர் களிடைத் தம் சமயத்தைப் பரப்புகின்றனர். நம்மைப் பொறுத்தவரை நிலை என்ன? முன்னர்க் கூறியதுபோல ஏற்கனவே சமயத்தை ஒரளவு அறிந்தவர்களிடம் மட்டுமே சென்று நம் சரக்கை வியாபாரம் செய்கிறோம். அதுமட்டுமன்று. எத்துணை அளவு பதி, பசு, பாசம் பற்றிப் பேசினாலும் இந்நாளைய தேவைக்கு அவை பயன்படக்கூடிய நிலையில் பேசுகிறோமே என்றால் அதுவும் இல்லை. பிற சமயத்தார்கள் அணுயுகத்திற் கேற்பத் தம் சமயக் கருத்துக்களுக்கு வேற்றுருவந் தந்து பரப்புகின்றனர். இதன் பயன் என்ன? சமயப்பற்றும் ஒரளவு அனுபவமும் உடைய பெரியோர்கட்கும் இளஞ் சமுதாயத்திற்கும் இடையே ஒரு பெரிய பள்ளம் ஏற்பட் டுள்ளது. காலத்தை வென்று நிற்பது சைவ சித்தாந்தம் என்றும் கூறுகிறோமே தவிர நம் காலத்தில் நம் கண் எதிரில் வாழும் இளைஞர்கட்குக் கூட நாம் அமைதி தேடித் தரமுடியவில்லை, இதனால் நம் சமயம் என்பது. வெறும் சடங்குகளாக முடிவதுடன் அதன் தத்துவம் மறக்கப்பட்டும் பொய்யாய்க் கனவாய்ப் பழங் கதையாய் மெல்ல போய்க் கொண்டிருக்கிறது. பழைய முறை மாற வேண்டும் : இந்நாளைய உலகம் அழிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்று கூட்டங்கூடிப் பேசுவதால் மட்டும் பயனின்று. இச்சமுதாயம் போகின்ற வேகத்தில் திருமந்திரம் போன்ற சமய நூல்களின் இடம் யாது என்று ஆராய வேண்டியுள்ளது? இதுநாள்வரை நாம் நம் சமய