பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் 0 125 தையும் இருதய நோய் உடையார் தாக்கப்படும்போது முன் எச்சரிக்கை எதுவும் இராது என்பதையும் எத்துணை அழகாகக் கூறுகிறார். 'அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார் மடக் கொடி யாரொடு மந்தணம் கொண்டார் இடப்பக்கமே சிறிது இறை நொந்தது என்றார் கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே!' என்பது அவர் வாக்கு. இன்ப நாட்டமே குறிக்கோள் : வாழ்க்கை எத்துணை மென்மையானது எவ்வளவு விரைவில் முடியக் கூடியது என்பதை இவண் காட்டும் திருமூலர், மனிதன் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழவும் முடியும் என்பதையும் எடுத்துக் கூறியுள்ளார். இவ்வாறு மாறுபட்ட கருத்துகளைத் திருமூலர் தேவை இல்லாமல் கூறவில்லை. அதற்கொரு ஆழமான காரண முண்டு. ஒர் அறிவுயிராகிய அமீபா (Ameba) விலிருந்து ஆறறிவு படைத்த மனிதன் ஈறாக அனைவருக்கும் பொதுவான இயல்பாக ஏதேனும் உண்டா? உண்டு. அதுவே துன்பத்தை வெறுத்தலும் இன்பத்தை நாடலு மாம். இந்த உயிர் இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டு திருமூலர் துன்பத்தை எடுத்துக் காட்டுகிறார். இதனை வெறுக்கும் உணர்ச்சியைத் தூண்டிவிட்டுஅடுத்து இன்பத்தை அடையும் வழியைக் கூறுகிறார். ஒவ்வொரு துன்பமாகக் களைந்தாலும் அது வேண்டப்படுவதே யாகும். 'யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்' என்பது பொதுமறை. ஆனால்ஒவ்வொரு துன்பமாகக் கண்டு களைவதென்பது மரத்தின் ஒவ்வொரு