பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 е э. ச. ஞானசம்பந்தன் கிளையாக முறிப்பது போலாகும். மரத்தை அழிக்க வேண்டுமாயின் வேரைக் களைந்து வெந்நீரை விட வேண்டியதுதானே! அதுபோல எல்லாத் துன்பத்திற்கும் காரணமாயுள்ள பிறவித் துன்பத்தைப் போக்க முயல்வது தானே முறை. இவ்வாறு பிறவியைப் போக்கவேண்டும் என்று கூறும் மூலரே ஒருவன் ஐயாயிரம் ஆண்டுகள் வாழ லாம் என்றுங் கூறுகிறார். அவ்வாறானால் அவர் பிறவியை அறுக்கவேண்டும் என்று கூறுவது வெறும் உடம்பை ஒழிக்கவேண்டும் என்ற பொருளிலன்று என்பதுவிளங்கும். பிறவியில் ஏற்படும் துன்பத்தைப் போக்க வழியறியார் பிறவியையே போக்க நினைத்தனர். உடம்பின் பயன் : உடம்பெடுத்ததன் பயனை அடையக் கூடுமானால் உடம்பையும்.அதற்குரிய பிறப்பையும் யாரும்கடிவதில்லை. பின்னர் வந்த பெரியோர் மனித்தப் பிறவியும் வேண்டு வதே என்றும் மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலிதாம் இன்பம்' என்றும் கூறிப் போயினர். மூலரும் 'உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே' என்று கூறு கிறார். அவ்வாறானால் உடபின் பயன் என்று இவர்கள் "எதனைக் கருதினார்கள்? கூடும் அன்பினில் கும்பிடு வதையே பயன்’ என்று கருதினர். இந்தப் பயன் உடம் பெடுத்தவர்கட்குக் கிடைக்கவில்லையெனில் பிறவி வீணாகி விடுகிறது; துன்பம் நிறைந்ததாகி விடுகிறது. வாழ்க்கையில் நாம் என்ன செய்கிறோம்?ஒரு பொருள் நமக்குப் பயன்படும் என்று கண்டால் அதனைப்போற்றிப் பாதுகாக்கின்றோம். பயன்படாத பொருளைத் துரக்கி எறிந்துவிடுகிறோம். அதுபோலப் பிறவி பயன்படுமானால் அதனைப் பாதுகாக்க வேண்டும்! என்ன பயனை விளைக் கிறது எனில் வணங்குதலாகிய பயனை அளிக்கிறது. யாரை வணங்குவது என்ற வினாவிற்குச் சிவத்தை வணங்