பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 0 அ. ச. ஞானசம்பந்தன் சில இயல்புகள் பிறப்பிலேயே தோன்றிவிடுகின்றன. முட்டையினுள் இருக்கும் பறவை குறித்த காலம் வநது வுடன் முட்டையை அலகால் குத்தி வெளிப்படுவது & ನೆ? கலைஞர்களும் கண்டு வியக்கின்ற முறையில் சிலந்திகள் கூடு கட்டக் கற்றது யாண்டு? ஒரு சில விலங்குகளைக் கண்டு ஒரு சில விலங்குகள் அஞ்சுவது ஏன்? இவ்வினாக் களை இற்றை நாள் மேனாட்டாரும் விஞஞானிகளும் கேட்கத் தொடங்கிச் சங்கிலித் தொடர் போன்றது பிறவி என்ற முடிவுக்கு வர முயல்கின்றனர். நம் நாட்டைப் பொறுத்தவரைத் தத்துவஞானிகள், பக்தர்கள், ஆகிய இரு சாராரும் ஆன்ம யாத்திரையாகிய சங்கிலித் தொடரில் இறப்பும் பிறப்பும் ஒவ்வோர் கணுவே என்பதை அறிந்திருந்தனர். மேலும் இவ் வுடம்பின் உதவி இன்றியே ஆன்மா தனித்து இயங்க. முடியும் என்பதையும், பூதங்களின் சேர்க்கையாகிய இவ் வுடம்பைப் போலவே சூக்கும சரீரம் முதலிய உண்டு. என்றும் கருதினர். எனவேதான் இறப்புப் பற்றி இவர்கள். அஞ்சவில்லை. நீண்ட நெடும் பயணம் மேற்கொள்ளும் ஒருவன் இடையில் இளைப்பாறுதற்காக ஒரு சில நாட்கள் தங்கினால் மறுபடியும் புறப்படும்பொழுது இடத்தை விட்டுப் போகக் கவலைப் படுவதில்லை. அதுபோலவே இவர்களும் இறப்பைக் கண்டு அஞ்சுவதில்லை. "யானே தும் பிறப்பு அஞ்சேன், இறப்பதனுக்கு என் கடவேன்' [சதக-12) என்பது மணிவாசகர் வாக்கு. மரணமிலாப் பெருவாழ்வு : இதனையடுத்து இந்நாட்டுப் பக்தர்களில் சிலர் மரண மிலாப் பெருவாழ்வு என்ற ஒன்றையும் கூறியுள்ளனர். மரணமிலாப் பெருவாழ்வு என்று இராமலிங்க வள்ளலார் கூறும்பொழுது இந்த உடம்பைப் பற்றியுங்கூடக் கருது கிறாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது.மனித உடம்பு,