பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் 0 67 ஒன்று தன்னைப் போலவே மற்றொன்றை உற்பத்தி செய்து விட்டுத் தான்மடிவதனாலும்,எப்படியும் உலகிடை மனிதர் உடம்புடன் இருந்து கொண்டே இருப்பர் என்ப தனாலும் இதனை மரணமிலாப் பெருவாழ்வு என்று கூறினார்களோ என்றும் நினைக்கலாம். இன்றேல் யோக சாதனைகள் மூலம் இவ்வுடம்பை நெடுங்காலம் நிலை பெறுமாறு செய்யலாம் என்றுங் கூடக் கருதி இருக்கலாம். அல்லது இவ் வுடம்பைப் பற்றிக் கவலையுறாமல் ஆன்மா மூப்புச் சாக்காடு அற்றது என்ற கருத்திலுங் கூறி இருக் d9; GUT LÊ). மேலும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மிகப்பழைய சமயங்களாகிய சைவம், வைணவம் இரண்டுமே ஆன்மா பற்றியும், இறைவன் பற்றியும் இவ்வுலகம் பற்றியும் தெளிவான கருத்தைக் கொண்டிருந்தன. இம் மூன்றுமே என்றும் உள்பொருள்கள் என்றும் கூறின. இறைவனுடன் இரண்டறக் கலப்பது என்பதிற்கூட இவர்கள் மிகக் கவனத்துடன் இருந்தனர். அவனுடன் கலந்து ஒன்றாகி, விட்டால் அனுபவம் என்ற ஒன்று இல்லையாய்விடும். எனவே இரண்டு என்று கூறும் நிலை அறும்படியாகக் கலந்தனர் என்றும், அந்நிலையிலும் இடையீடு இல்லாத ஆனந்தம் கிட்டும் என்றுங் கூறினர். இதில் ஒரு சிறப்பு என்னையெனில் மேனாட்டுப் பக்தர்களுள் ஒருவராகிய, அர்ச். பால் (St. Paul) என்பாரும் ஆன்மாவின் மாற்றம் என்பது பற்றிக் கூற வருகையில் முழுதற் பொருளிடம் இணையும் ஆன்மா தன் தனித் தன்மையை இழப்பதோ முழுமுதற் பொருளால் கவர்ந்து கொள்ளப்படுவதோ இல்லை என்கிறார். வீடுபேற்றிலும் ஆன்மா தனித் தன்மையை முற்றிலும் இழந்து விடுவதில்லை ப்ளுட்ட னெஸ் என்ற பக்தர் கூறல் அறியத்தக்கது.1 1. The individual nature of soul is not lost or absorbed in the Absolute. Plotinus is emphatic