பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 9 அ. ச. ஞானசம்பந்தன் இந்த அடிப்படையில் கண்டால் மரணமிலாப் பெரு வாழ்வு என்றுநம் முன்னோர் கூறியதற்கும் மரணங்கடந்த sasa (Immortality)arsing மேனாட்டுப்பக்தர்கள் (Mystics) கூறுவதற்கும் தாம் இன்று சாதாரணமாகக் கூறும் பொருளன்றி வேறு பொருளும் இருத்தல் கூடுமோ என்று நினைய வேண்டியுளது. கேவலம் காலத் தத்துவத்தை (Time) இவ்வுடலுடன் கடந்து நிற்கின்ற ஒன்றை மட்டுமே நாம் மரணத்தை வென்றிருப்பது என்று கூறு இறோம். மேலே கூறப்பட்ட பக்தர்கள் காலத் தத்துவத் திற்குக்கூட நாம் தரும் பொருளைத் தராமல் இருப்பின் என் செய்வது? இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்ற மூன்று பாகுபாடுகளால் நாம் காலத் தத்துவத்தை அறிகிறோம். நம் நாட்டிலேயே தோன்றிய புத்தர் போன்றவர்கள் நிகழ் காலம் (Present) என்ற ஒன்றை ஏற்க மறுத்துவிட்டனர். காலத் தத்துவம் : தமிழ்நாட்டைப் பொறுத்தவரையும் காலம் பற்றிய கருத்து வேறுபாடுகள் இருந்தனவென்றே அறிகிறோம். ' காலந் தாமே மூன்று என மொழிப' என்றும், - இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றா அம்முக் காலமும் குறிப்பொடு கொள்ளும் -சொல்-வினை-2,3. that individuality, though not separate individuality, is preserved in the word *Yonder” and 1 am convinced that Spinoza believed the same. –Mysticism in Religion P. 84.