பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் இ 69. என்றும் தொல்காப்பியனார் நூற்பா இயற்றினார். எனினும் இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்ற நூற்பா விற்கு உரையிட்ட சேனாவரையர் இறப்ப வது: தொழிலது கழிவு ...தொழிலாவது பொருளினது புடை பெயர்ச்சியாகலின், அஃதொரு கணம் நிற்பதல்லது இரண்டு கணம் நில்லாமையின் நிகழ்ச்சி என்பது ஒன்று அதற்கில்லை யாயினும் உண்டல், தின்னல் எனப் பல் தொழில் தொகுதியை ஒரு தொழிலாகக் கோடலின், உண்ணா நின்றான், வாரா நின்றான் என நிகழ்ச்சியும் உடைத்தாயிற்றென்பது (வினை. சூ.3 உரை) என்று கூறினார். வினை இயலின் முதற் சூத்திரமாகிய வினை எனப் படுவது வேற்றுமை கொள்ளாது, நினையுங்காலைக் காலமொடு தோன்றும் (வினை-சூ.1) என்ற நூற்பா விற்கு உரையிட்ட கல்லாடனார், 'நினையுங்காலை' என்றதனான் காலம் தன்னை மூன்று என்பாரும், தொழி லாவது பொருளினது புடை பெயர்ச்சியாகலின், அஃது ஒரு கணம் நிற்பதல்லது இரண்டு கணம் நில்லாமையின் நிகழ்ச்சி என்பதொன்று இல்லையாதலின் இறப்பும் எதிர்வும் எனக்காலம் இரண்டே என்பாரும், நிகழ்காலம் என்ற ஒன்றுமே உண்டு என்பாரும் எனப் பலமதம் உண்டு என்பது அறிவிக்கப்பட்டது (சொல்-வினை-1 -கல்லாடனார் உரை) மரணம் என்றால் என்ன? காலம் என்ற தத்துவத்தைப் பற்றியே இத்தகைய கருத்து வேறுபாடுகள் உண்டெனின் மரணமிலாப் பெரு வாழ்வு என்பதன் பொருளை இன்று நாம் கொள்ளும் முறையிலேயே பக்தர்களும், தத்துவாதிகளும், விஞ்ஞானி களும் கொண்டனர் என்று கூறல் எவ்வாறு பொருந்தும்? மேலும் மரணம் என்பது தான் யாது? என்ற ಟಿ