பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 இ. அ. ச. ஞானசம்பந்தன் விஞ்ஞானம் பெரு வளர்ச்சி அடைந்துள்ள இற்றை நாளிற் கூட விடை காண்பது அரிதாக உள்ளது. உடற் சாவு (Physical death) மருத்துவர் அறிமுறைச் சாவு (clinical death) 10ay&#Tal (mental death) எனப் பல வகைச் சாவுகள் பேசப்படுகின்றன. எனவே பக்தர்கள் கண்ட மரணமிலாப் பெருவாழ்வு பற்றி நாம் ஒன்றும் அறியவோ கூறவோ முடியாது என்ற உண்மையை ஏற்றுக் கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை. பொதுத்தன்மை : பக்தர்கள் அனைவரிடமும் காணப்பெற்ற ஒரு பொதுத் தன்மையை மறத்தல் கூடாது. ஏனைய தத்துவ வாதிகள், விஞ்ஞானிகள் ஆகியோரிடை பொதுத் தன்மை இருத்தல் வேண்டும் என்ற இன்றியமையாமை இல்லை. பல சமயங்களில் மிகமிக அடிப்படையானவற்றுட் கூட இவர்களுள் மாறுபாடு தோன்றலாம். ஆனால் காலம், தேசம், வர்த்தமானம் ஆகியவற்றால் பிரிக்கப்பட்டிருப் பினும், இந்தப் பக்தர்கள் வெவ்வேறு பெயர்களால் பரம் பொருளை அழைப்பினும் இவர்களிடையே இந்த ஒரு பொதுத் தன்மை மறக்க முடியாத ஒன்றாகும். இவர்கள் அனைவரும் மதிப்புடையன (Values) என்று கருதியலை யாவை எனின் அன்பு, உண்மை (சத்தியம்). அழகு என்பவையேயாம் இவற்றையே இயற்கையின் இயல்பு களாகவும் கண்டனர். இம்மதிப்பீடுகள் வேறு ஏதோ ஒரு GsöÄGGstafsör [Ideals Gs)–Irratiot Gé [symbolic] கருதப்படவில்லை. இவையே உள்பொருளாகக் (reality) கருதப்பெற்றன. > - செற்றம் நீங்கியவர் : மதிப்புடைப் பொருள்களாகிய இம் மூன்றையும் பக்தர்கள் அழியாப் பொருள்கள் என்று கருதினார்கள்.