பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் ஒ 71 அன்பு அல்லது அருள் என்பதை இந்நாட்டு பக்தர்களும் பிறநாட்டுப் பக்தர்களும் பெரிதும் போற்றினர். யாவ ரிடத்தும், எல்லாப் பொருள்களிடத்தும் அன்பு செய்வதே தம் கடப்பாடு என்பதை உணர்ந்தனர் இவ்வாறு அன்பு செய்வதைத் தம் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்ட வுடன் காழ்ப்புணர்ச்சி (malice) என்பது அவர்களிடம் இல்லாமற் போயிற்று. அதன் பயனாக வேண்டியவர், வேண்டாதவர் என்ற வேறுபாடு நீங்கினதுடன் உயர்ந் தவர் தாழ்ந்தவர் என்ற எண்ணமும் மெல்ல மெல்ல மறையலாயிற்று. மிகப் பழைய புறநானூறு பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே (1921 என்று கூறியது வெறும் வெற்றுரையன்று; பொருளுரையே என்பது நன்கு பெறப்பட்டது. மனிதன் அன்பை வளர்த்துக் கொண்டு செல்லவேண்டும். அது தொடர் புடையார் மாட்டே முதலில் தொடங்குகிறது; நாளா வட்டத்தில் தொடர்பிலாதார் மாட்டும் பரவுகிறது. அப்பொழுது அதே அன்பு அருள்' எனும் புதிய பெயரைப் பெறுகிறது. அருள் என்னும் அன்பு ஈன்குழவி (757) என வள்ளுவர் அருள் பிறக்கும் வழியைக் குறித்து விட்டார். இறைவன் உயிர்களிடம் காட்டும் அன்பைக்கூட கருணை என்ற வடசொல்லால் குறிப்பதுடன் இறையருள்' என்றே இத்தமிழர் குறித்தனர். அருள் தோன்றும் நெறி : பக்தர்கள் பிற உயிர்களிடம் அன்புடையவர்களாக இருக்கும்பொழுது அந்த அன்பை வேண்டியவர் வேண்டா தவர் என்ற வேறுபாடற்றுக் காட்டுகின்றனர் என்று முன்னர்க் குறிக்கப் பெற்றது. இவ்வாறு அவர்களால் அன்பு செய்யப்படுபவர் உயர் திணையோராகிய மக்கள் மட்டுமே எனக் கருத வேண்டா. அஃறிணைப் பொரு