தந்தையின் ஆணை நடராஜனின் கோபமான வார்த்தைகளைக்கேட்ட மாணிக்கம் பணிந்து போகவேண்யதாயிற்று. மார்வாடி தன் வேலையை முடித்துக்கொண்டு சென்றான்; வீடு 'வெரிச்'சென்று மடம்'போலக் காட்சியளித்தது, துன் பத்திற்கு மேல் துன்பம், எல்லோரும் அழுது; கொண் டிருந்தார்கள்,நடராஜன் மௌனமாக உட்கார்ந்திருந்தான். தன் பழைய வீட்டுச் சாமான்கள் ஜப்தி ஆகிவிட்டது என்பதை அறிய குமார் அளவு கடந்த வேதனை அடைந் தான். பிரிந்த அன்றே பிறந்த இடத்தில் பெருந்துக்கம் வந்துவிட்டதே என்று வருந்தினான், எல்லோருக்கும் சாப்பாட்டை தன் வீட்டிலேயே தயாரித்தான் குமார்; தான் போக மனமில்லாமல், வேற் றான் ஒருவனிடம் உணவை கொடுத்தனுப்பினான், நடராஜன் முகத்திலே பிரேதக்களை வீசியது. தன் குடும்பம் நாளுக்கு நாள் நலிந்து வருவதை நினைத்து நினைத்து வேதனைப்பட்டான். லீலாவுக்கு வீட்டு நிலையை நினைத்து கவலை ஒருபுர மும். கணவன் இல்லாமல் 'வாழாவெட்டி'யாக இருக்கி றோமே என்ற எண்ணம் ஒருபுறமும் சேர்ந்து அழுகை யை உண்டாக்கியது. இவை எல்லாவற்றையும் பார்த்த வள்ளியம்மாள் லீலா தன் மகன் இன்றி வாடுகிறாளே என்று வருந்தினாள்; எப்படியும் அவள் வாழ வகை செய்யவேண்டும் என்று எண்ணி தன் மகன் நடராஜனிடம் சென்றாள். நடராஜா! நான் சொல்வதை தயவு செய்துகேள். நடந்ததை எல்லாம் மனதில் போட்டுக்கொள்ளாதே ! சேகர் எங்கிருந்தாலும் சரி தேடிப்பிடித்து கூட்டிவா!' 1
பக்கம்:தந்தையின் ஆணை.pdf/75
Appearance