உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தையின் ஆணை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 தந்தையின் ஆணை சேகர் இன்னொருத்தியின் கணவரா? இந்த ஜென் மத்தில் அவர் என் காதலரில்லையா? அவரை அடைய மாட்டேனா? சேகர்! என் வாழ்வு கனவுதானா ? என்னென்ன நினைத்தேன்? இருவரும் ஒரே தொழில் பயின்று புகழ் பெற்று புருஷன் மனைவி என்று எப்படியும் வாழ்வோம் என்று மனக்கோட்டை கட்டியிருந்தேனே. அது அத்த னையும் கானல்தானா? இப்படி ஏதேதோ நினைத்துக்கொண்டு வந்தாள் நளினா! ஒரு திருப்பத்தில் கார் மரத்திலே மோதியது. நளினா தூக்கி எரியப்பட்டாள். நளினா கண்விழித்துப் பார்க்கிறபோது, தன் ஆஸ்பத் திரிக்கே தான் கொண்டுவரப்பட்டிருப்பதை உணர்ந்தாள். நளினாவுக்கு சேகர் சிகிச்சை செய்ய ஆரம்பித்தான். ஆனால் நளினா தடுத்தாள். "சேகர் நீங்கள் எனக்கு சிகிச்சை செய்யவேண் டாம். உங்கள் அண்ணா தீயில் வெந்து சாகும் நிலையில் இருக்கிறார்: உடனே அங்கு புறப்படுங்கள்." "முடியாது! உன்னை இந்த நிலையில் விட்டுவிட்டு எங்கும் போகமாட்டேன். சேகர் ! இருவரையும் உங்களால் காப்பாற்ற முடி யாது! உங்கள் அண்ணாவை காக்க புறப்படுங்கள்! +4 அதெல்லாம் முடியாது. உன்னைக் காப்பாற்றிவிட் டுதான் அடுத்த வேலை. இப்படி ஆணித்தரமாக பதில் சொல்லிய சேகர் மருந்தை கலக்க பாட்டிலை கையில் எடுத்தான்; எதிரே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தந்தையின்_ஆணை.pdf/85&oldid=1741047" இலிருந்து மீள்விக்கப்பட்டது