பக்கம்:தந்தையின் காதலி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாஸிலி உறுமினன். தன் கைகளைப் பலமாக வீசிக் கொண்டே. யாகோவை தாக்கினன் யாகோவிஞல் அதைத் தடுக்கமுடியவில்லை. அந்த அடி அவனது தலைமீது விழுக் தது. தடுமாறிக்கொண்டே, தன் தங்தையின் கோபம் பொங்கும் முகத்தைப் பீதியுடன் பார்த்தான்.

வாஸிலி மீண்டும் கையை ஓங்கியபோது, யாகோவும் தன் முஷ்டியை உயர்த்திக்கொண்டு, 'பத்திரமா இரு” என்று எச்சரித்தான். ܫ

  • பத்திரமா இருக்க உனக்குக் காட்றேன் 1,
  • நில்லு, நான் சொல்லிக்கிட்டிருக்கேன் :

" ஆஹா.நீ உன் அப்பனையே பயங் காட்டுறியா? உன் அப்பண்டா அப்பன் ! அப்பன் 1"

அந்தக் குடிசை அவர்களது சண்டையை எதிசெசவீத் தது; 15டுங்கியது. அவர்கள் இருவரும் உப்பு மூட்டை மீதும், கவிழ்த்துப் போட்ட பீப்பாய் மீதும், மரக்கட்டை மீதும் தடுமாறி உருண்டு விழுந்தனர்.

தன் முஷ்டியால் அடிகளைத் தாங்கிக்கொண்டு, , முகம் வெளுத்து, வியர்வை டொழிய, பற்களைக் கடித்து, கண்கள் ஓகாயைப்போல் கனன்றெரிய, தன் தந்தையிடமிருந்து மெது வாகப் பின்வாங்கினுன் யாகோவ். தந்தையும் கண்மூடித்தன மான வெறியோடு முன்டிகளே உயர்த்தி ஆட்டிக்கொண்டு அவனைப் பின்தொடர்ந்தான்; சிலிர்த்துக்கொண்டு சிற்கும் காட்டுப்பன்றியைப்போல் தலைமயிரெல்லாம் உ லே ந் து குத்திட்டு நிற்கப் பாய்ந்தான்.

'விடு என்னே ! போதும், நிறுத்து 1" என்று அமைதி யும், அலங்கோலமும் நிறைக்த குரலில் சொல்லிவிட்டு, வாசலைக் கடந்து குடிசைக்கு வெளியே வந்தான் யாகோல்,

அப்பனும் இன்னும் கோரமாகக் கர்ஜித்துக்கொண்டு அவனேப் பின்தொடர்ந்தான்; ஆளுல், அவன் கொடுத்த அடியெல்லாம் யாகோவின் முஷ்டிகளை மட்டுமே தாக்கின.

91