பக்கம்:தந்தையும் மகளும்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186

தந்தையும்

 

சாதாரணமாக ஒவ்வொரு மலரிலும் மகரந்தப் பையுள்ள கேசரமும் முட்டைகளுள்ள சூல்த் தண்டுமிருக்கும். காற்று வீசும் பொழுது கேசரத்திள்ள்ள மகரந்தம் சூல்த் தண்டின் முடியில் போய் ஒட்டிக் கொள்ளும். இவ்வாறு ஒரே மலரிலுள்ள மகரந்தம் அதே மலரிலுள்ள சூல் முடியில் போய்ச் சேருமானால் அதைச் சுய மகரந்தச் சேர்க்கை என் று கூறுவார்கள்.

ஆனால் பல செடிகளில் ஒரு மலரிலுள்ள மகரந்தம் அந்த இனத்தைச் சேர்ந்த மற்றொரு மலரிலுள்ள சூல் முடியைப் போய்ச்சேரும். அதைப்பிற மகரந்தரச்சேர்க்கை என்று கூறுவார்கள். இது சாதாரணமாகக் காற்று வீசுவதால்மட்டும் நடை பெறுவதில்லை. இது பெரும்பாலும் தேனீக்கள், வண்ணாத்திப் பூச்சிகள் போன்ற சிறு பூச்சிகளின் உதவியினாலேயே நடைபெறுகிறது.

தேனீ மலரிலுள்ள அமிர்தத்தைப் பருகுவதற்காக மலரினுள் நுழைகிறது. அது அமிர்தம் பருகும்போது கேசரத்திலுள்ள மகரந்தப் பொடி அதன் கால்களில் ஒட்டிக் கொள்கிறது. பிறகு பூச்சி மற்றொரு மலரில் அமிர்தம் குடிக்கும்போது

காலிலுள்ள மகரந்தம் சூல் முடியில் ஒட்டிக் கொள்கிறது. இவ்வாறு மகரந்தச் சேர்க்கை தேனீயின் உதவியால் நடைபெறுகிறது. தேனீயில்லாவிட்டால் மகரந்தச் சேர்க்கையுமில்லை காயும் விதையும் உண்டாவதுமில்லை.