பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

127

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


காரியதரிசிகள், காங்கிரஸ் பிரமுகர்கள், தேசாபிமானிகள் ஆகிய சர் சி.பி. இராமசாமி அய்யர், கே. சீனிவாச அய்யங்கார், வி. கிருஷ்ணசாமி அய்யர், சர் பி. எஸ். சிவசாமி அய்யர், மகாகனம் வி.எஸ். சீனிவாச சாஸ்திரிகள் முதலியவர்கள் ஆடிய வேட்டைகளைத்தான் ஆடுகிறார்களே ஒழிய - அவர்கள் வாங்கிய சம்பளத்தைத்தான் வாங்குகிறார்களே ஒழியப் - புதிய வேட்டை ஒன்றுமில்லை; அதிகச் சம்பளமும் இல்லை .

காங்கிரஸ், பார்ப்பனர்களுக்கே உத்தியோகம், படிப்பு முதலியவை இருக்கும்படிப் பார்த்து வந்தது: ஜஸ்டிஸ் கட்சி பார்ப்பனருக்கும், பார்ப்பனரல்லாதாருக்கும் இருக்கும்படிப் பார்த்து வருகிறது! எல்லா உத்தியோகங்களுக்கும், எல்லாப் பதவிகளுக்கும் பார்ப்பனரல்லாதாருக்கும் லாயக்கும் உரிமையும் உண்டு என்பதைச் செய்து காட்டி, மெய்ப்பித்து வருகின்றது!

கேள்வி: உத்தியோகந்தான் பெரிதா?

பதில்: ஆம்; இதுவரை தேசாபிமானிகள், காங்கிரஸ்காரர்கள், தேசிய வீரர்கள் என்பவர்கள் பெரிதும் உத்தியோகத்தை இலட்சியமாகக் கொண்டுதான் உழைத்து வந்திருக்கிறார்கள். இப்போது பார்ப்பனரல்லாதார் அந்தக் கொள்கையைக் கொண்டவுடன், பார்ப்பனர்கள் அதைத் தேசத்துரோகமென்று சொல்ல வந்து விட்டார்கள்!

ஒருவன் பாடுபட்டும் பட்டினியாய்க் கிடப்பதும், ஒருவன் பாடுபடாமல் வயிறுபுடைக்கத் தின்று புரளுவதும், ஒருவன் பல வேலைகளைக் கைப்பற்றித் தனது தேவைக்கு மேல் பயனடைந்து பாழாக்க, ஒருவன் செய்வதற்குக்கூட வேலையில்லாமல் திண்டாடித் தெருவில்திரிய - இவைகளுக்கு வகுப்பு ஆதிக்கமும், வகுப்பு வித்தியாசமும் காரணமாயிருப்பதென்றால், இவற்றை எப்படிச் சகித்துக்கொண்டு, வகுப்பைப் பற்றியே கவலையில்லாத ஒரு தேசாபிமானத்தை ஆதரிக்க முடியுமென்று கேட்கிறேன்!

ஜஸ்டிஸ் கட்சியை நான் ஆதரிப்பதைக் கண்டு நீங்கள் வயிற்றெரிச்சல் படுவதில் பயனொன்றுமில்லை. அது தைரியமாய் வகுப்பு நியாயத்தையும், வகுப்பு உத்தியோகங்களையும் நிலைநாட்டி; உயர்வு தாழ்வுகளை ஒழிக்கச் சட்டம் செய்வதையும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை அமுல் நடத்துவதையும் கொள்கையாகக் கொண்டு, வேலை செய்து வருகின்றது.

ஜஸ்டிஸ் கட்சியின் யோக்கியதையும் காங்கிரசின் யோக்கியதையும் நாணயமாய் வெளியாக வேண்டுமானால், கம்பளிபோட்டு எல்லோரும் உட்கார்ந்து, ஒரு பொது நியாயாதிபதியை வைத்து. இருவரும் பேசுவோம்! ஜஸ்டிஸ் கட்சியின் அக்கிரமங்களை நாணயத்-