பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


தவறுதல்களை நீங்கள்‌ சொல்லுங்கள்‌. காங்கிரஸ்‌ - பார்ப்பனர்‌ அக்கிரமங்களை, மோசங்களை நாணயத்‌ தவறுதல்களை நானும்‌ சொல்கிறேன்‌, யார்‌ சொல்வது சரி என்று முடிவு செய்யட்டும்‌! இந்த நாட்டுப்‌ பார்ப்பனர்களுடையவும்‌, பார்ப்பனியத்தினுடையவும்‌, காங்கிரசினுடையவும்‌, அரசியலினுடையவும்‌, தேசாபிமானத்‌ தினுடையவும்‌ 30, 40 வருஷத்திய வண்டவாளமும்‌, கொடிவழிப்‌ பட்டியும்‌ என்னிடமிருக்கிறதே ஒழிய, நான்‌ வெறும்‌ ஆள்‌ என்று மாத்திரம்‌ கருதிக்‌ கூப்பாடு போட்டு, மிரட்டி ஓட்டி விடலாமென்று நினனத்து ஏமாந்து போகாதீர்கள்‌!

நான்‌ மொட்டைமரம்‌; என்னை மிரட்டுவதற்கு உங்களிடம்‌ சரக்கு இடையாது! உத்தயோகமோ, பணமோ, வயிற்றுச்‌ சோற்றுக்கு வழியோ, ஒரு கவுரவமோ, பெருமையோ எதிர்பார்த்து நான்‌ பொதுச்‌சேவையில்‌ இறங்கவில்லை! நான்‌ 6, 7 முறை ஜெயில்‌ பார்த்தாகி விட்டது; சிவில்‌, கிரிமினல்‌ இரண்டும்‌ பார்த்தாகிவிட்டது; பார்ப்பனர்கள்‌ தொல்லைகளையும்‌, அவர்களால்‌ கூடிய மட்டிலும்‌ செய்து பார்த்தாய்‌ விட்டதை, அனுபலித்துமாய்‌ விட்டது! காடு வா வா என்கிறது; வீடு போ போ என்கிறது! (இதற்கப்புறம்‌ 40 ஆண்டுகள்‌ பெரியார்‌ வாழ்ந்திருக்கிறாரே!) நான்‌ செத்தால்‌ எனக்காக அழுபவர்கள்‌ கூட யாருமில்லை! என்னால்‌ காப்பாற்றப்பட வேண்டியவர்களும்‌ எவருமில்லை! நான்‌ ஒற்றை ஆள்‌! நின்ற நாளைக்கு நெடுஞ்சுவர்‌; விழுந்தால்‌ குட்டிச்சுவர்‌! முழுகிப்போவது ஒன்றுமில்லை; எலெக்ஷன்‌ முடிந்த எட்டாம்‌ நாள்‌ நான்‌ அரசாங்க விருந்தாளியாய்ப்‌ போகப்‌ போகிறேன்‌!

கேள்வி: அப்படியானால்‌ நீங்கள்‌ ஏன்‌ காங்கிரசில்‌ சேரக்கூடாது?

பதில்‌: சேருவதற்குச்‌ சமயம்‌ பார்த்துக்‌ கொண்டுதானிருக்‌கிறேன்‌. இந்த பம்பாய்‌ காங்கிரசில்‌ தோழர்‌ காந்தியவர்கள்‌ விலகிப்‌ போய்‌ விடுவதாகச்‌ சொல்லுகிறாராம்‌. அப்படி அவர்‌ விலகி விடுவாரானாலும்‌, எனது திட்டங்களை ஜஸ்டிஸ்‌ கட்சி ஒப்புக்‌ கொள்ளவில்லையானாலும்‌, நான்‌ காங்கிரசில்‌ சேர்ந்து, எனது திட்டத்தை நடத்த, முயற்சி செய்ய உத்தேசித்திருக்கிறேன்‌.

இன்று இரவு 8 மணிக்கு, இந்தக்‌ கூட்டத்தை முடித்துக்கொண்டு, ஒரு விருந்துக்கு வருவதாக ஒப்புக்கொண்டு இருக்கிறேன்‌. மணி 8.30 ஆகிவிட்டது. இனியும்‌ கேள்விகள்‌ இருந்தால்‌ கேட்கலாம்‌. இன்னும்‌ 15 நிமிஷம்‌ இங்கிருக்க ஆட்சேபனை இல்லை!-

பெரியார்‌ சிறிது நேரம்‌ நின்று கொண்டு, கேள்விகளை எதிர்பார்த்தார்‌. யாரும்‌ கேட்க முன்வராததால்‌ “இத்துடன்‌ கூட்டத்தை முடித்து விடுகிறேன்‌” என்றார்‌!