பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

கவிஞர் கருணானந்தம்

132


இதழ்‌, 1939-ல்‌ “பகுத்தறிவு” நாளேடு, 1985-ல்‌ “பகுத்தறிவு” மாத இதழ்‌ இப்படியாகப்‌ பலப்பல.

கருத்துச்‌ சுரங்கமான பெரியார்‌, தமிழ்‌ நாட்டில்‌ அடிப்படைக்‌ கல்வி அகலமாகப்‌ பரவாத காரணத்தை ஆழ்ந்து சிந்தித்து வந்தார்‌. மனுதர்மப்படி சூத்திரன்‌ கல்வி கற்கக்‌ கூடாது; உடலுழைப்பு மட்டுமே செய்ய வேண்டும்‌ என்ற சூழ்ச்சி ஒரு புறம்‌, மக்களின்‌ வறுமை நிலையில்‌ அன்றாடம்‌ வாய்க்கும்‌ கைக்குமே போராட்டம்‌ என்னும்‌ நிலை இன்னொரு புறம்‌ பாதித்தாலும்‌, தமிழ்‌ மொழியிலுள்ள பெருத்த குறைபாடு அதன்‌ நெடுங்கணக்கிலுள்ள ஏராளமான எழுத்து வடிவங்களே என்பது பெரியாரின்‌ ஆராய்ச்சி முடிவாகும்‌. இப்போதுள்ள தமிழ்‌ எழுத்து முறை எவ்வளவோ மாறுதல்களைக்‌ கண்டு வந்துள்ளது என்பது, கல்வெட்டு எழுத்துகளை ஊன்றிப்‌ பார்த்தால்‌ விளங்கும்‌, வீரமாமுனிவர்‌ எனும்‌ பெஸ்கி பாதிரியார்‌ கடைசியாகச்‌ சல மாற்றங்கள்‌ செய்துள்ளார்‌. அதே போல்‌, உயிர்‌ 12, ஆய்தம்‌ 1, மெய்‌ 18, உயிர்மெய்‌ 216 ஆகிய இத்தனை வடிவங்களை இளம்‌ நெஞ்சங்களில்‌ பதிய வைப்பது என்பதற்குப்‌ பதிலாக, இந்த எழுத்து வடிவங்களில்‌ சிலவற்றை நாமும்‌ குறைக்கலாமே என்று பெரியார்‌ சந்தித்தார்‌.

ளை என்றும்‌ பதின்மூன்று எழுத்து வடிவங்களை மாற்றியமைத்தார்‌. 1935-ஆம்‌ ஆண்டு சனவரி 13-ஆம்‌ நாள்‌ முதல்‌ நடைமுறைப்படுத்தித்‌ தமது பத்திரிகைகளிலும்‌ புத்தகங்களிலும்‌ தொடர்ந்து கையாண்டு வந்தார்‌.

இன்றும்‌ இதேமுறை திராவிடர்கழகத்தில்‌ தொடர்கிறது. இன்றையத்‌ தமிழ்நாடு அரசு இந்த முறையை அனைவரும்‌

கையாள வேண்டுமென அரசாணையும்‌ பிறப்பித்துள்ளது பாராட்டுக்குரியதாகும்‌.

தட்டச்சுச்‌ செய்யவும்‌, அச்சுக்‌ கோக்கவும்‌ இம்மாற்றம்‌ எளிதாக இருக்கும்‌. மேலும்‌, தமிழில்‌ ஐ, ஒள ஆகிய இரு உயிரெழுத்துகளும்‌, அவற்றின்மேல்‌ மெய்‌ சேர்ந்த 36 எழுத்துகளும்‌ எழுத்து வடிவத்தில்‌ தேவையில்லை. ஒலி வடிவத்திற்கேற்ப அய்‌ என்றும்‌, அவ்‌ என்றும்‌ எழுதிக்கொள்ளலாம்‌ என்றும்‌ பெரியார்‌ விளக்கியுள்ளார்‌. உயிர்‌ 5, மெய்‌ 15, ஆய்தம்‌ 1, சிறப்புக்குறி 8, ஆக 29-ல்‌ தமிழ்‌ எழுத்து வடிவத்தை அடக்கலாம்‌ என்றும்‌ கூறியுள்ளார்‌.

இந்தக்‌ காலகட்டத்தில்‌, பெரியாரின்‌ பொதுவுடைமைக்‌ கருத்துகள்‌ புதுமையாகப்‌ புகுத்தப்பட்டதால்‌, இயக்க மேடைகளிலும்‌, மாநாடுகளிலும்‌ சமுதாய சம்பந்தமான கருத்துகளைவிட, அரசியல்‌