பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

139

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


இளையார் - உயர் எண்ணங்கள் மலரும் சோலை என்றார் பெரியாரைப்பற்றி. 1964-ஆம் ஆண்டு மறைந்தார் சாகா இலக்கியம் பல படைத்த பின்னர்!

நீதிக்கட்சி தமது திட்டத்தை ஏற்றுக் கொண்டதில் பெரியார் மிகுந்த பெருமிதமும் பூரிப்பும் கொண்டார். அவர் விரும்பியதும் அஃதேயாகும். காங்கிரஸ் புறக்கணித்ததையே பெரியார் பெருமையாகத் கருதினார். காரணம், காங்கிரஸ் பசுத்தோல் போர்த்திய புலி என்று, அதன் தோலுரித்துக் காட்டவே பெரியார் நேரம் பார்த்திருந்தார். அதனால் 1937-ஆம் ஆண்டுத் தேர்தலில் காங்கிரஸ் பெருமளவில் ஈடுபட்டதைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டார். வெற்றி தோல்லி பற்றிய கவலை அவருக்கு எப்போதுமே இருப்பதில்லையாதலால், முழுமூச்சாக நீதிக்கட்சியை ஆதரித்துத் தேர்தல் பிரச்சார இயந்திரத்தை முடுக்கி விட்டார். 1938-ஆம் ஆண்டுவரை பெரியார் மதுவிலக்கை ஆதரித்துத்தான் வந்தார். கதர், கைராட்டை, கைத்தறி இவற்றிலெல்லாம் அவர் நம்பிக்கை இழந்திருந்தார். மதச்சின்னங்களைப் போலவே கதரும் ஒரு மூடநம்பிக்கைச் சின்னம்; பொருளாதார அடிப்படையிலும் இலாபமில்லாமல், மனித உழைப்பை வீணாக்கிடும் ஒரு சாதனம், இயந்திர யுகத்தில் தேவையில்லாத பழைய கட்டை வண்டிக் காலத் திட்டம்; இது கதைக்குதவாது என்று பெரியார் கருதினார்.

நாகம்மையார் மறைந்தபோது பெரியாருக்கு வயது 54. கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் பெரியார் ஈரோட்டில் தங்க நேர்ந்து, தமது தாயார் சின்னத்தாயம்மையாரைச் சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டால், அந்த அம்மையார், ஈன்ற அன்னையென்ற பாசத்தோடும், தனது இளைய மகன் பயமறியாமல் கண்டபடி திரிவதால், மீண்டும் கால் கட்டுப்போட வேண்டும் என்ற வழக்கமான ஆசையோடும், திருமணம் செய்து கொள்ளத் தூண்டுவார். அப்பேர்ப்பட்ட சின்னத்தாயம்மையார் தமது 95-ஆவது வயது வரையில் நல்ல நிதானத்தோடும் நடமாட்டத்தோடும் (ஆகா! அப்படியே தந்தை பெரியாரை நினைவூட்டுகிறாரே!) வாழ்ந்து வந்தவர். 1936-ஆம் ஆண்டு ஜூலை 28-ஆம் நாள், நள்ளிரவு 12 மணிக்கு இயற்கை எய்தினார். ஜோலார்ப் பேட்டை சென்றிருந்த பெரியாருக்குச் செய்தி எட்டவே மறுநாள் வந்து சேர்ந்தார்.

தாயாரைப் பற்றிய சுருக்கமான வாழ்க்கை வரலாற்றைத் திருக்குறள் போல் இனிதாக எளிதாக 2-8-1936 “குடி அரசு” இதழில் பெரியார் எழுதி வெளியிட்டுள்ளதைக் காணும்போது, இவ்வளவு அருமையான Biographer ஏன் தமது Autobiography எழுதி நமக்கு உயிர் ஊட்டியிருக்கக் கூடாது, என்ற அய்ய வினா எழாமல் இருக்காது! இறுதியாகத், தமது அன்னையாரின் பழைமைப் பிடிப்புக்கோர் உதாரணமாகப், புகழ் பெற்ற மவுலானா முகம்மது அலி, ஷவுக்கத்-