பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

169

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


நாடகத்தைக் கண்ணுற்ற பெரியாருக்குக் கலைத் துறையின் மீது அதிக ஆவல் பிறந்தது. நம்மவர்கள் இந்தக் கலைகளை நன்முறையில், வளர்த்திட, நாமும் மூன்று வகையான பிரிவுகளை உண்டாக்க வேண்டும். சினிமா நாடகம் பார்க்கிறவர் கழகம், இசை நுகர்வோர் கழகம், பத்திரிகை படிப்போர் கழகம் - இவை நமக்கு அவசியம் என்றார் பெரியார். திருவையாறு அரசர் கல்லூரியில், விடுதியிலுள்ள பார்ப்பன மாணவர்க்குத் தனி உணவு ஏற்பாடு நடைபெறுவது கேள்விப்பட்டு, “மீண்டும் சேர்மாதேவியா?” எனப் பெரியார் குமுறினார்.

கோவை மாவட்டத்தில் முதலாவதாகத் திராவிடர் கழகம், 1943 நவம்பர் 18-ஆம் நாள் பெரியாரால் ஆரம்பிக்கப்பட்டது. இது ஆங்காங்கு பரவத் தொடங்கியது.

மாயூரத்தை அடுத்த மூவலூரில் பெரியார் பிறந்த நாள் விழாவில் நவம்பர் 21-ஆம் நாள் வ.ரா. நெடுஞ்செழியன் கலந்து கொண்டதாகக் “குடி அரசு” செய்தி ஒன்று வெளியாகியுள்ளது யார் இவர்?

பதினான்கு வயது பள்ளிச் சிறாராயிருந்த போதே 1938 - இந்திப் போரில் திருவாரூரில் கொடி பிடித்துக் கோஷமிட்டவர் மு. கருணாநிதி. 1942-ல் துவக்கிய “முரசொலி” இன்றளவும் நடைபோடுகிறது வெற்றிப் பெருமிதம். 1943-ல் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் துவக்கிப் பின் திராவிட மாணவர் கழகத்துடன் இணைத்தார். சாந்தா அல்லது பழனியப்பன் என்ற நாடகத்தை 1944-ல் எழுதி நடித்துப், பின் நாகை திராவிட நடிகர் கழகத்துக்குத் தந்து, தாமும் விழுப்புரம், புதுவையில் நடித்து வந்தார். 1945 இறுதியில் ஈரோட்டில் பெரியாருடன் தங்கிக் “குடி அரசு” உதவி ஆசிரியரானார். 1946-ல் கோவையிலும், பின்னர் சேலத்திலும் திரைப்படக் கதை வசனப் பணியில் தமிழகத்தில் மிக உயர்ந்த இடம் வகித்தவர். 1942 செப்டம்பர் 13-ல் இசைவாணர் சிதம்பரம் ஜெயராமன் தங்கை பத்மாவை மணந்தார். 12-4-48-ல் அவரது அகால மறைவுக்குப் பின், 1948 செப்டம்பர் 15-ல் தயாளு அம்மையாரை மணந்தார். 1951 முதல் சென்னையில் நிரந்தரமாகத் தங்கினார். சென்னை மாநகராட்சியை 1959-ல் தி.மு.க வசமாக்கினார். 1967-ல் தி.மு.க ஆளுங்கட்சியாக அருந்துணை புரிந்தார். 1957 முதல் தொய்வின்றிச் சட்டமன்ற உறுப்பினர். 1969 முதல் 1976 சனவரி முடிய தமிழகத்தில் பொற்காலங்கண்ட முதல் முதலமைச்சர். தனித் தன்மை படைத்த, எழுச்சியூட்டும் மேடைப் பேச்சாளர். உணர்ச்சியால் ஊன் உயிரெலாம் உருக்கிடும் ஓங்கு தமிழ்ப் படைப்பாளர். தமிழகத்தின் ஒரே நம்பிக்கைப் பெருஞ்சூரியன். 1976-ல் ஏற்பட்ட சோதனையைக் கடந்த நிகழ்ச்சிக்கு, உலக