பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

182


சேலம் மாநாட்டில் தீர்மானத்தை வழிமொழிந்து பேசியதன் மூலம் இயக்கத்தின் வரலாற்றில் இடம் பிடித்துக் கொண்டது. வரலாறு படிப்போராக இல்லாமல் திராவிட இயக்க வரலாறு படைப்போராக மாறியது.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத்தில் முதல் வகுப்பு ஹானர்ஸ் தேர்வு. சட்டக் கல்லூரியில் பி.எல். தேர்வு. கடலூரில் கி. வீரமணி எம். ஏ.பி.எல். வழக்கறிஞராகப் பதிவு. திராவிட முன்னேற்றக் கழகம் பிரிந்த போதும் பெரியாரைப் பிரியாத பேராண்மை.

பெரியாரையும், திராவிட பாரம்பரியத்தின் வரலாற்றையும், சுயமரியாதை இயக்கத்தின் கோட்பாடுகளையும் அய்யந்திரிபு இன்றி உணர்ந்தமையாலும், அபாரமான நினைவாற்றலாலும், கல்வியின் தேர்ச்சியாலும், பயிற்சியின் சிறப்பினாலும், சொல்லாட்சித் திறத்தாலும் மேடையிலே இவர் வெற்றிகரமான விரைவுப் பேச்சாளராக விளங்குகிறார். பூவாளூர் அ. பொன்னம்பலனார் கூட விரைவாகப் பேசுவார். ஆனால் சில பல சொற்கள் விளங்காமலே போகும். வீரமணியின் விரைவான சொற்பெருக்கிலும் விளங்காத சொல்லடுக்கே விழுவதில்லை. அலங்கார நடையல்ல. ஆனால் அழுத்தமான தெளிவான உறுதியான நடை, ஆழமான அனுபவமிக்க கருத்தோட்டம்.

எழுத்திலும் இவர் இணையற்ற வெற்றி கண்டுள்ளார். “விடுதலை”யில் இவர் பொறுப்பேற்ற பிறகு எழுதப்பட்ட தலையங்கம், துணைத்தலையங்கம் எவையாயினும், வெளியிடப்பட்ட பெட்டிச் செய்திகள், துணுக்குகள், செய்திகள் எவையாயினும் பெரியாரின் அங்கீகாரம் பெற்றவை என்று நம்பலாம் எஸ். குருசாமி பொறுப்பில் “விடுதலை” நடந்த காலத்தில் பெரியாரின் எண்ணத்திற்கு முரணாக எத்தனையோ சங்கதிகள் வெளியானதுண்டு.

பெரியாரின் அனைத்து நற்பண்புகட்கும் உறைவிடமாய், அவர் தீர்மானித்த பெண்மணியை மணந்து, அளவாகும், இரு ஆண் ஒரு பெண் மக்களுடன், அவர் ஏற்றி தந்த பகுத்தறிவுச் சுடரைப் பாதுகாப்பாய் பத்திரமாய் உயிரினும் மேலாகப் போற்றி வரும் இவர் ஒருவரே தன்மான இயக்கத்தின் நம்பிக்கைப் பேரொளியாய் இன்று திகழ்கின்றார்.

பதவிச் சுகம் அனுபவித்தவர்களால் சும்மாயிருக்க முடியாதே! அவர்கள் சென்னையில் ஒன்று கூடித் தாங்கள்தான் ஜஸ்டிஸ் கட்சி என்று அறிக்கை விட்டனர். பெரியார் அவர்களின் தவறான போக்கைக்