பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

211

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


ஏ.டி. கோபால், ஆம்பூர் பெருமாள், திருவத்திபுரம் வேல். சோமசுந்தரம், காஞ்சிபுரம், சி.பி. இராஜமாணிக்கம், சென்னை எஸ்.பி. தட்சணாமூர்த்தி, பலராமன், மு.பொ, வீரன், வில்லிவாக்கம் தியாகராஜன், சி.டி.டி. அரசு, பெங்களூர் நாராயணசாமி, கொடையரசன், டி.டி. அரசு, ஜனகம்மாள்... என்று இந்தப் பட்டியல் மிக நீண்டு கொண்டே போகும். உயிருள்ளவரை பெரியாரிடம் காட்டிய அன்பில் இம்மியும் குன்றாத சான்றாண்மையாளர்கள் இவர்கள்.

இவர்கள் மீது வைத்த அசையா நம்பிக்கையினால்தான் பெரியார், அண்ணாவும் பிறரும் சென்றதை வெகுவாகப் பொருட்படுத்தாமல் தன் பயணத்தைத் தொடர்ந்தார்! கட்டுப்பாடு காப்பாற்றாதவர்களைத் தனியே பிரித்தார் பெரியார், என்றும் சிலர் கருதினர்.

“திராவிடநாடு” பெரியாரின் செயலுக்கு வருந்துவோர் பட்டியலை 24.7.49 இதழிலிருந்து, கண்ணீர்த்துளிகள் என்ற தலைப்பில் தொடர்ந்து வெளியிட்டு வந்தது. அண்ணாவின் அணியிலும் எண்ணிக்கை பெருகியது.

குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க நினைத்த காங்கிரஸ் ஆட்சி, - ஏராளமான கழக நூல்களைத் தடைசெய்தது: நாடகங்களுக்குத் தடைகள் விதிக்கப்பட்டன. அண்ணாவின் இலட்சிய வரலாறு என்ற நூல் தடை விதிக்கப்பட்டுப் பறிமுதலும் செய்யப்பட்டது.

10.9.49 “குடி அரசு” இதழில் ஈ.வெ.ரா. மணியம்மை என்று - சட்டப்படிப் பெயர் திருத்தப்பட்ட செய்தி அறிக்கையாக வெளிவந்தது. திருச்சி மாவட்டத் திராவிடர் கழகம், புவனகிரி, நாகை இப்படிப் பல கழகங்கள் பெரியார் பக்கம் இருப்பதைக் காட்டிக் கொண்டன. 5.11.49 அன்று பெரியார், துரோகப்படலம் என்ற தலைப்பில், அண்ணாமீது குற்றச்சாட்டுகளைச் சுமத்திக் கழக நிதி வசூலுக்கு எதிராகப் பாரதிதாசனுக்கு நிதி வசூலித்தது போன்ற பல சம்பவங்களை நினைவு கூர்ந்தார். குடம் குடமாய்க் கண்ணீர் துளிகளை இப்போது சிந்துகிறார்களே - என்றார். தம் நிலையைத் தெளிவுபடுத்த, அண்ணா , டி.எம். பார்த்தசாரதியைக் கொண்டு, “மாலைமணி” நாளேடு, 10.8.49 முதல் துவக்கினார். சென்னையில் செப்படம்பர் 17-ஆம் நாள் திராவிட முன்னேற்றக் கழகம் துவக்கினார். ஆலமரத்துக்கு விழுது போல், திராவிடர் கழகத்துக்குத் திராவிட முன்னேற்றக் கழகம் விளங்கு மென்றார்.

உடுமலைப்பேட்டையில் 1949 ஏப்ரல் 16-ஆம் நாள் 144 தடையுத்தரவைப் பெரியார் மீறியதாக, அரசு ஒரு வழக்குப் போட்டது. பலமுறை பெரியாரை வரச்சொல்லி, நீதிமன்றம் வழக்கை ஒத்திப் போட்டுக், கடைசியில் 2.8.49 அன்று அந்த வழக்கை, அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது. அதாவது, கழகம் பிளவுபடுமுன்னர்